Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL RCB Memes - எங்கே செல்லும் இந்த வாழ்க்கை..! ஆர்சிபியை வச்சு செய்யும் மீம்ஸ்.. இது தான் ஒரிஜினல்

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே, மும்பைக்கு பிறகு அதிக ரசிகர்கள் இருப்பது என்றால் அது ஆர்சிபிக்கு தான். இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும், பல முறை வென்றவர்கள் போல் மற்ற அணி ரசிகர்களிடம் அவர்கள் போடும் சீன் இருக்கே தாங்க முடியாது. இதனால் ஆர்சிபி அணி தோற்கும் போது எல்லாம் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் பறக்கும்.

 IPL 2023 - Fans trolling RCB Team for their loss vs lsg

நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போது இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாமல் பெண் ரசிகை ஒருவர் கதறி அழுதார். இது பார்க்கவே கஷ்டமாக இருந்தாலும், மற்ற அணி ரசிகர்கள் அதனை கொண்டாடும் விதமாக ஸ்பைடர் படத்தில் மற்றவர்கள் அழுகையை எஸ்ஜே சூர்யா பார்த்து ரசிப்பது போல் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

 IPL 2023 - Fans trolling RCB Team for their loss vs lsg

இதே போன்று நேற்று ஆர்சிபி போட்டி தொடங்கியதும், அந்த அணி ரசிகர் ஒருவர் கெத்தாக இனி டைம் லைன் முழுவதுமே எங்க கண்ட்ரோலில் இருக்கும் என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், ஆர்சிபி தோற்ற உடன் தலையில் துண்டை போட்டு இருப்பது போல் அந்த ரசகரே ஆர்சிபி அணியை கிண்டல் செய்தார்.

 IPL 2023 - Fans trolling RCB Team for their loss vs lsg

ஆர்சிபி அணி எப்போதுமே வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் தோல்வி அடைந்துவிடுவார்கள். எனினும் ஒரு சில போட்டிகளில் தொடர்ந்த வெற்றி பெற்று நமக்கே ஆச்சரியம் அளிப்பார்கள். பிறகு நாமே ஆர்சிபி மீது நம்பிக்கை வைக்கும் போது பிறகு மீண்டும் ஆட்டத்தை கோட்டை விட்டுவிடுவார்கள். அப்போது எல்லாம் இது தான் ஒரிஜினல் ஆர்சிபி என மற்ற ரசிகர்கள் கிண்டல் அடிப்பார்கள்.

 IPL 2023 - Fans trolling RCB Team for their loss vs lsg

நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான், பேட்டில் பந்து படாமல், ரன் ஓடி வெற்றி பெற செய்துவிடுவார். ஆனால் எதோ சிக்சர் அடித்து வெற்றி பெற்றார் போல், ஆவேஷ் கான் ஹெல்மட்டை எல்லாம் தூக்கி போட்டு கொண்டாடுவார். இதனை பார்த்த நெட்டிசன்கள், 5 சிக்சர் அடித்தவன் எல்லாம் அமைதியாக இருக்கான், இவன் அலப்பறை தாங்க முடியலையே என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

 IPL 2023 - Fans trolling RCB Team for their loss vs lsg

ஐபிஎல் தொடரில் நேற்று கம்பீர், திடீரென்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். பெங்களூரு ரசிகர்களை போட்டி முடிந்த உடன் அமைதியாக இருங்கள் என்று செய்கை காட்டி வெறுப்பேற்றினார். இதனை கிண்டல் செய்யும் விதமாக கம்பீர் என்ற மிருகத்தை ஆர்சிபியிடம் சிக்க வைத்துவிட்டு மற்ற அணிகள் செல்வது போல் மீம் போட்டுள்ளனர்.

இதே போன்று மான்கட் செய்ய தவறிய ஹர்சல் பட்டேலை சமூக வலைத்தளத்திற்கு வர வேண்டாம் என்று ரசிகர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர். மான்கட் செய்யும் போது ஹர்சல் பட்டேல் அதனை தவறவிட்டார். உடனே ரசிகர்கள் எல்லாரும் சூனா பனா ஆயிட முடியுமா என்று அஸ்வின் ஹர்சல் பட்டேலை கேட்பது போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.

Story first published: Tuesday, April 11, 2023, 8:29 [IST]
Other articles published on Apr 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+