மும்பை : ஐபிஎல் 16வது சீசனில் முதல் பாதி தற்போது முடிவடைந்தது. மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டத்தில், தற்போது 35 போட்டிகள் முடிவடைந்துவிட்டது. அனைத்து அணிகளும் தற்போது 7 லீக் போட்டி விளையாடி பாதி கிணறுகளை தாண்டிவிட்டனர்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் 10 புள்ளிகளுடன் குஜராத் 2வது இடத்திலும், ராஜஸ்தான் 8 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், லக்னோ 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
தற்போது முதல் பாதி முடிவில் பார்த்தோம் என்றால் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே பலமாக விளங்குகிறது. மற்ற அணிகளை காட்டிலும், அனைத்து இடத்திற்கும் வீரர்கள் கிடைத்து செட்டில் ஆன அணியாக சிஎஸ்கே விளங்குகிறது.
இவர்களுக்கு அடுத்த படியாக குஜராத் அணியும், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சரி சமமான பலத்துடன் உள்ளது. எனினும் அந்த அணியில் முக்கிய வீரர்கள் காலை வாரினால், அதிலிருந்து மீள்வது சிரமமாக அவர்களுக்கு உள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை பட்லர் கடந்த சில போட்டிகளாக சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது சறுக்கலாக உள்ளது
லக்னோ அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் பலமாக இருந்தாலும், பேட்டிங்கில் கேஎல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் மற்ற வீரர்களை காவு கொடுக்கிறது. இதனை சரி செய்யவில்லை என்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது சிரமம். இவர்களைவிட தற்போது பலமாக இருப்பது ஆர்சிபி தான். பேட்டிங், பந்துவீச்சு என சரி சம பலத்துடன் இருக்கிறார்கள்.

இதனால் பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி செல்வது உறுதயாகிவிடும். பஞ்சாப் அணியும் மும்பை போன்ற அணிகளுக்கு தற்போது சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஷிகர் தவான் காயத்திலிருந்து திரும்பினால், அவர்களது பேட்டிங் பலமும் அதிகரிக்கும். இதே போன்று மும்பை அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிக்கல் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கே உரிய பலத்துடன் அவர்கள் இல்லை. இன்னும் சில தவறுகளை அவர்கள் சரி செய்ய வேண்டும். இதே போன்று டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தற்போதுள்ள நிலை, பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினம். இவர்கள் எஞ்சிய அனைத்து போட்டியும் வெல்ல வேண்டும் என்ற நிலை இவ்விரு அணிக்கும் ஏற்பட்டுள்ளது. இது முதல் பாதியின் நிலைமை தான், இரண்டாவது பாதி என்ன டிவிஸ்ட் கொடுக்க போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.