Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு சோதனை.. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஹர்திக் பாண்டியா கொடுத்த ட்விஸ்ட்!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 3 வெற்றி, 2 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணியை பொறுத்தவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

IPL 2023: Gujarat titans captain Hardik Pandya won the toss and elects to bat against LSG

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், குஜராத் அணியில் அல்ஜாரி ஜோசப் நீக்கப்பட்டு, ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளரான நூர் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் லக்னோ அணியில் இளம் வீரர் யுத்வீர் சிங் நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளில் லோ ஸ்கோரிங் ஆட்டமாகவே இருந்துள்ளது. இதற்கேற்ப இரு அணிகளும் தயார் நிலையில் களமிறங்கியுள்ள ஆட்டத்தில் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் அணி விவரம்: சாஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அஹ்மத், மோகித் சர்மா

லக்னோ அணி விவரம்: கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருணால் பாண்டியா, பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய்

Story first published: Saturday, April 22, 2023, 15:18 [IST]
Other articles published on Apr 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+