கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் மோதிய போது, ரிங்கு சிங்கின் அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. இதனால் இந்த இரு அணிகள் மீண்டும் மோதவுள்ள போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். குஜராத் அணி சார்பாக கடந்த போட்டியில் ஆடிய அதே அணி களமிறக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை ஜேசன் ராய் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் மழை எப்போதும் வேண்டுமானாலும் பெய்யும் சூழல் உள்ளது. அதேபோல் இந்த நேரத்தில் மைதானத்தில் மின் விளக்குகள் போடப்பட்டுள்ளதால், சேஸிங் செய்யும் அணிக்கு அதிக சாதகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 9 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றிருந்தாலும், குஜராத் அணி மீண்டும் சேஸிங்கை தேர்வு செய்துள்ளது.
குஜராத் அணி விவரம்: சாஹா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், நூர் அஹ்மத், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோஷ் லிட்டில்
இம்பேக்ட் பிளேயர்ஸ்: சுப்மன் கில், கேஎஸ் பரத், சாய் கிஷோர், சிவம் மாவி, ஜெயந்த் யாதவ்
கொல்கத்தா அணி விவரம்: ஜெகதீசன், குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வீசா, ஷர்துல் தாகூர், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி
இம்பேக்ட் பிளேயர்ஸ்: சுயஷ் சர்மா, மன்தீப் சிங், அனுகுல் ராய், டிம் சவுதி, கெஜ்ரோலியா