Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்று சாதனையை படைக்க போகும் ஹர்திக் பாண்டியா.. ஐபிஎல் தொடரில் ரியல் ஹீரோ?

மொஹாலி: ஐபிஎல் தொடரில் இன்று 18 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் பலப் பரீட்சை நடத்துகின்றன. கடந்த போட்டியில் உடல்நிலை காரணமாக விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தற்போது இன்றைய ஆட்டத்தில் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க காத்திருக்கிறார். ஐபிஎல் தொடர் மூலம் இந்தியா தேடி வந்த ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா கிடைத்திருக்கிறார்.தற்போது டி20 அணியின் கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியா, ஒரு நாள் கிரிக்கெட்டிலும் தனது இடத்தை உறுதி செய்து இருக்கிறார்.

IPL 2023 - Hardik pandya is all set to achieve massive milestone

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா 24 ரன்கள் அடித்தால் ஐபிஎல் வரலாற்றில் 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைவார். இந்த சாதனையை இதுவரை ஐந்து கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே படைத்திருக்கிறார்கள்.

வாட்சன்,பொலார்ட் , காலிஸ் ஜடேஜா மற்றும் ரசில் மட்டுமே 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் எடுத்திருக்கிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடத் தொடங்கிய ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு இந்திய அணியில் ஸ்டார் வீரராக உருவானார்.

IPL 2023 - Hardik pandya is all set to achieve massive milestone

ஆறு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவின் 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. முதல் தொடரிலே ஹர்திக் பாண்டியா சாம்பியன் கோப்பையை வென்று தந்திருந்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையும் குஜராத் அணி சாதிக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, April 13, 2023, 21:22 [IST]
Other articles published on Apr 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+