55 பந்துகளில் ஹாரி புருக் சதம்.. கொல்கத்தாவை நொறுக்கிய ஐதராபாத்.. இமாலய இலக்கு நிர்ணயித்த SRH
கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணி 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இன்று தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், தொடக்க வீரராக களமிறங்கிய ஹாரி புருக், ரசிகர்களுக்கு தீபாவளியை தனது பேட்டிங் மூலம் காட்டினார். துண்டு ஒரு முறை தான் தவறும் என்று நமது சூப்பர் ஸ்டார் சொல்வது போல், ஹார புருக், பேட்டிங்கில் நொறுக்கிவிட்டார்.

ஹாரி புருக் முனையில் இருந்து ரன்கள் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் மறுமுனையில் மாயங் அகர்வால்,ராகுல் திரிபாதி தலா 9 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினர். எனினும் இது குறித்து எல்லாம் கவலைப்படாமல் ஹாரி புருக் பட்டையை கிளப்பினார். ஹாரி புருக் 45 ரன்கள் எடுத்திருந்த போது, அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சுயாஷ் சர்மா தவறவிட்டார். இது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
களத்துக்கு வந்த கேப்டன் ஏய்டன் மார்க்கரமும் கொஞ்சம் கூட கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு கருனை காட்டவில்லை. இதனால் 25 பந்துகளில் மார்க்கரம் சதம் அடித்தார். இதில் 5 சிக்சரும், 2 பவுண்டரிகளும் அடங்கும். மார்க்கரம் ஆட்டமிழந்த உடன், இளம் வீரர் அபிஷக் சர்மாவும், யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்தியது போல் 17 பந்தில் 32 ரன்கள் விளாசினார்.

மறுபுறம் ஹாரி புருக், தனது வருகையை ஐபிஎலில் இன்று 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். கிளாசென் 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications