Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலம் - எந்த அணியிடம் எவ்வளவு தொகை இருக்கு? IPL Retention க்கு முன்பு உள்ள நிலவரம் இதோ?

மும்பை : ஐபிஎல் ரிட்டன்ஷனுக்கான கடைசி தேதி நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் பல்வேறு அணிகள் தங்களது தேவைப்படாத வீரர்களை விடுவித்து வருகின்றனர். இதனை அடுத்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் புதிய வீரர்கள் அடங்கிய பட்டியலை வைத்து மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.

கூடுதலாக ரூ.5 கோடி

கூடுதலாக ரூ.5 கோடி

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் எவ்வளவு தொகை வைத்திருக்கிறது. என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணிக்கும் 5 கோடி ரூபாய் கூடுதலாக செலவழிக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக 8 கோடியே 45 லட்சம் இருக்கிறது.

எவ்வளவு தொகை

எவ்வளவு தொகை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 7 கோடியே 95 லட்சம் ரூபாய் கைவசம் இருக்கிறது. பெங்களூர் அணியிடம் ஆறு கோடியே 55 லட்சம் ரூபாயும், ராஜஸ்தான் அணியிடம் 5 கோடியே 95 லட்சமும் கைவசம் இருக்கிறது. கொல்கத்தா அணியிடம் 5 கோடியே 45 லட்சம் ரூபாயும், குஜராத் அணியிடம் 5 கோடியே 15 லட்சம் ரூபாயும் மிச்சம் உள்ளது.

ஐபிஎல் ரிட்டன்ஷன்

ஐபிஎல் ரிட்டன்ஷன்

மும்பை, ஹைதராபாத் டெல்லி ஆகிய அணிகளிடம் தலா 5 கோடியே 10 லட்சம் ரூபாய் கைவசம் இருக்கிறது. லக்னோ அணியிடம் தற்போது 5 கோடி ரூபாய் கைவசம் இருக்கிறது. இது வீரர்களை விடுவிக்கும் முன் ஐபிஎல் அணிகளிடம் உள்ள தொகையாகும். உதாரணத்திற்கு சிஎஸ்கே அணி ஜடேஜாவை விடுவித்தால் அந்த அணியிடம் தற்போது இருக்கும் தொகையோட கூடுதலாக 16 கோடி ரூபாய் கிடைக்கும் .

மாறுப்படும் தொகை

மாறுப்படும் தொகை

எந்த அணி எந்த வீரர்களை விடுவிக்கிறது என்பதை பொறுத்து இந்தத் தொகை மாறுபடும் பஞ்சாப் அணி ஷாருக்கான் உள்ளிட்ட அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர்களை விடிவித்துள்ளதால் அந்த அணியிடம் கிட்டத்தட்ட 50 முதல் 60 கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணிகிடும் 22 கோடி வீரர்களை விடுவித்த பிறகு இருக்கும் என கருதப்படுகிறது.

Story first published: Monday, November 14, 2022, 21:28 [IST]
Other articles published on Nov 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+