Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எம்எஸ் தோனி கேப்டன்சியில் ஆட வேண்டும்.. ஓபனாக சொன்ன ஜோ ரூட்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் கேப்டன்சியில் விளையாட விரும்புவதாக ராஜஸ்தான் அணியின் ஜோ ரூட், தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தனது கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்து எம்எஸ் தோனியிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய போது, கடைசி சீசனில் விளையாடுவதாக நான் விளையாடுவதாக நீங்கள் தான் சொல்லுகிறீர்கள். இதுவரை அப்படி நான் ஒன்றும் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.

IPL 2023: Joe Root, Dhruv Jurel and Devdutt Padikkal picked playing under CSK Captain MS Dhoni

இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கேப்டனாக, விக்கெட் கீப்பராக எம்எஸ் தோனி செய்யும் சாகசங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் குவிந்து வருகின்றனர். அதேபோல் கடைசி ஓவரில் தோனி அடிக்கும் சிக்சர்கள் சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் எம்எஸ் தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாட ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், எம்எஸ் தோனியின் கேப்டன்சி கீழ் விளையாட ஆர்வம் தெரிவித்துள்ளார். அதேபோல் ராஜஸ்தான் அணியின் துருவ் ஜுரெல், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் தோனியின் கேப்டன்சியில் கீழ் ஆட ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

IPL 2023: Joe Root, Dhruv Jurel and Devdutt Padikkal picked playing under CSK Captain MS Dhoni

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், யார் கேப்டன்சியின் கீழ் விளையாட ஆசைப்படுகிறீர்கள்? விராட் கோலி அல்லது எம்எஸ் தோனி என்று ஆப்ஷன் வழங்கப்பட்டது. அதில் எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான துருவ் ஜுரெல் வழக்கம் போல் தோனியை தேர்வு செய்தார். அதேபோல் தேவ்தத் படிக்கல் மற்றும் ஜோ ரூட் ஆகியோரும் தோனியின் கீழ் ஆடவாம ஆர்வம் தெரிவித்தனர். இந்த வீடியோ சென்னை அணி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, May 4, 2023, 20:08 [IST]
Other articles published on May 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+