லக்னோ : ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனும், ஏதேனும் ஒரு அணி மோசமாக விளையாடும். மற்ற அணிகள் அந்த அணியை எதிர்கொள்ளும் போது எளிதாக வென்று விடுவார்கள். தற்போது நடப்பு சீசனில் அப்படி எல்லாரும் அடிக்க காத்திருக்கும் அணி என்றால் அது ஐதராபாத் தான்.
இந்த நிலையில், ஐதராபாத் அணி முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது. எனினும் கேப்டன் ஏய்டன் மார்க்கரம் உள்ளிட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள் அணிக்கு திரும்பியதால், ஐதராபாத் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, பெரிய இலக்கை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. மாயங் அகர்வால் 8 ரன்களிலும், அன்மோல்பிரித் சிங் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஏய்டன் மார்க்கரம் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதே போன்று ஹரி புருக் 3 ரன்களில் வெளியேறினார்.
அப்துல் சமாத் 21 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 16 ரன்களும் ஆட்டமிழக்க ஐதராபாத் அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மெயர்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். அப்போது காவ்யா துள்ளி குதித்தார்.
ஆனால், அதன் பிறகு காவ்யா ஆட்டம் முழுவதும் சைலண்ட் மோடுக்கு சென்றார். ராகுல் 35 ரன்களும், குர்னல் பாண்டியா 34 ரன்களும் எடுக்க, எந்த நெருக்கடியும் இன்றி 16வது ஓவரில் 5 விக்கெட்டகளை இழந்து லக்னோ அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.