கொல்கத்தா: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்டு வரும் எண்ணத்துடன் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது. இன்னொரு பக்கம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேசுகையில், டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். எங்கள் வீரர்களின் மன உறுதி அதிகரித்துள்ளது. குறிப்பாக எங்கள் இளம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளார்கள். அணியில் உள்ள ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது.
குறைந்தது ஒரு கேட்ச், அல்லது ரன் அவுட் என்று ஏதாவது வகையில் பங்களிக்க வேண்டும். ஈடன் கார்டன் மைதானத்தில் ஏராளமான கிரிக்கெட்டை ஆடி இருக்கிறேன். இங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணத்தால் கரக்பூர் வரும். அங்கிருந்து எனக்கு எப்போதும் அதிகமான ஆதரவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, மொயின் அலி, ராயுடு, ஷிவம் துபே, ஜடேஜா, எம்எஸ் தோனி, பதிராணா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா
கொல்கத்தா அணி விவரம்: ஜெகதீசன், ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் வீஸே, கெஜ்ரோலியா, சுயஷ் சர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி