Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியும், குட்டி கோலியும் இன்று மோதல்.. RCB க்கு திரும்பும் நட்சத்திர பவுலர்.. வெல்லப்போவது யார்?

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முக்கிய ஆட்டத்தில் ஆர் சி பி அணியும் லக்னோ அணியுடன் மோதும் உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுகிற காரணத்தினால் ஆர் சி பி அணி முன்கூட்டியே தொடர்ந்து சொந்த மண்ணில் விளையாடியது.

தற்போது இரண்டு வாரத்திற்கு அந்த அணி வெளியூரில் அடுத்தடுத்து விளையாட இருக்கிறது. இது நிச்சயம் வீரர்களின் உடல் நிலையை பாதிக்கத்தான் செய்யும். எனினும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் களத்தில் ஜொலிப்பது ஐபிஎல் தொடரில் உள்ள சவாலாகும்.

IPL 2023 - LSG vs RCB Match preview Today and pitch conditions

லக்னோ ஆடுகளம் மிகவும் தோய்வாக இருக்கும் என்பதால் ரன்கள் அவ்வளவாக வராது. இதனால் இரு அணி பேட்ஸ்மேன்களும் களத்தில் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும். கடந்த ஆட்டத்தில் 250 ரன்கள் அடித்த லக்னோ வீரர்கள் தற்போது உத்வேகத்துடன் இருந்தாலும் ஸ்டோனிஸ் காயத்தால் அவதிப்படுவது லக்னோவுக்கு பின்னடைவாக தான் கருதப்படுகிறது.

எனினும் ஸ்டோனிஸ் இல்லை என்றால் நட்சத்திர வீரர் குயின்டன் டிகாக் லக்னோ அணிக்கு திரும்பலாம். ஆர் சி பி அணியை பொறுத்தவரை விராட் கோலி, டு பிளசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோருக்கு பிறகு எந்த வீரர்களும் சரியாக விளையாடவில்லை. தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

எனினும் பந்துவீச்சு ஆர்சிபிக்கு தொடர்ந்து கை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆர்.சிபி அணியின் பந்து வீச்சு மேலும் அதிகரிக்கும்.

இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் சி பி அணியில் உள்ள இளம் வீரர்கள் பேட்டிங்கில் ஜொலித்தால் மட்டுமே அவர்களால் லக்னோவை வீழ்த்த முடியும். இந்த ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்லும். ஆர் சி பி வெற்றி பெற்றால் அவர்களும் சிஎஸ்கே, பஞ்சாப், ராஜஸ்தான், லக்னோ ஆகியோர்களுடன் 10 புள்ளிகள் வந்து சேருவார்கள்.

Story first published: Monday, May 1, 2023, 11:29 [IST]
Other articles published on May 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+