Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அண்ணனுக்கு எதிராக களமிறங்கிய தம்பி.. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு.. லக்னோ அணியில் டி காக் சேர்ப்பு!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் க்ருனால் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து வலிமை வாய்ந்த அணியான லக்னோ அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் க்ருனால் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், க்ருனால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை எதிர்த்து அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா களமிறங்கியுள்ளார். இதனால் சகோதரர்களுக்கு எதிரான யுத்தம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், லக்னோ பேட்டிங் வரிசை வலிமையானது என்பதாலும், க்ருனால் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

IPL 2023: Lucknow won the toss and chose to bowl against Gujarat

லக்னோ அணியை பொறுத்தவரை நவீன் உல் ஹக் நீக்கப்ப்பட்டு டீ காக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஸ்வப்னில் சிங்கும் இணைந்துள்ளார். அதேபோல் குஜராத் அணியில் ஜோஷ்வா லிட்டில் தேசிய அணிக்கு திரும்பியுள்ளதால், அவருக்கு பதிலாக அல்ஜாரி ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லக்னோ அணி விவரம்: டீ காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், பூரன், ஸ்வப்னில் சிங், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னாய், மோசின் கான், ஆவேஷ் கான்

குஜராத் அணி விவரம்: சாஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அஹ்மத், முகமது ஷமி

Story first published: Sunday, May 7, 2023, 15:13 [IST]
Other articles published on May 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+