ஐபிஎல் 16வது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை கொல்கத்தா வீழ்த்தியது. இதன் மூலம் தற்போது பஞ்சாப் அணி 10 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இதன் காரணமாக புள்ளி பட்டியலில் நான்கு முதல் எட்டாவது இடம் இருக்கும் அணி அனைத்தும் 10 புள்ளிகள் உடன் இருக்கிறார்கள். இதன் காரணமாக களம் இறங்கிய 10 அணிகளுக்கும் தற்போது வரை பிளே ஆப் சுற்றும் வாய்ப்பு இருக்கிறது.

இதனை கிண்டல் செய்யும் விதமாக ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், வெங்கடேஷ், நாகார்ஜுனா போன்ற நடிகர்கள் ஒரே ஆடையை அணிந்து இருக்கும் புகைப்படம் மிகவும் பிரபலம். இந்த புகைப்படத்தை வைத்து அனைத்து அணிகளும் 10 புள்ளிகளுடன் ஒரே மாதிரி இருப்பதாக விமர்சித்து ரசிகர்கள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

இதேபோன்று வடிவேலு பேருந்து நடத்துனராக இருக்கும் போது மக்கள் அனைவரும் பேருந்தில் ஏறுவதற்கு கடுமையாக போட்டி போடுவார்கள். ஆனால் யாரும் ஏற முடியாத படி சண்டை போட்டுக் கொள்வார்கள். இதை பார்த்து அடிச்சிகிறானுங்க தவிர யாருமே பஸ்ல ஏற மாட்றானுங்க அப்படின்னு வடிவேல் சொல்லுவார். இதனை மீம் டெம்ப்ளேட் ஆக போட்டு எல்லாம் மாத்தி மாத்தி அடிச்சிக்கிறானுங்க தவிர யாருமே பிளே ஆப்க்கு வரமாட்றாங்க என்று பிசிசிஐ கேட்பது போல் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

இதேபோன்று மற்றொரு மீம் கிரியேட்டர்ஸ் அனைத்துப் போட்டிகளிலும் ஒரு அணி தோற்று மற்ற அணி 10 புள்ளிக்கு வருவது போல் முடிவுகள் அமைகிறது. அப்படி பார்க்கும்போது நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா வென்றால் 10 புள்ளிகளை பெறும் என அனைவரும் கருதினர். ஸ்கிரிப்ட் படி பார்த்தால் நேற்று கொல்கத்தா அணி வெற்றி பெறும் என பலரும் மீம்ஸ் போட்டு இருந்தார்கள். அதுபடியே நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா வென்றது. இதனையும் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலக்கி வருகிறார்கள்.

இதேபோன்று பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி சிந்தாவும் கே கே ஆர் உரிமையாளர் ஷாருக்கானும் பல்வேறு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். நேற்று ஆட்டத்தில் இவர்கள் மோதியபோது மீம் கிரியேட்டர்ஸ் சும்மா இருப்பார்களா, அதனால் இருவரும் சந்தித்து கொள்வது போல் மீம்ஸ் போட்டு சிரிக்க வைத்திருக்கிறார்கள்.