Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலம்.. வீரரை வாங்கும் முன் யோசிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.. மிஸ் ஆனால் அவ்வளோதான்!

கொச்சி: ஐபிஎல் மினி ஏலத்தில் பங்குபெறவுள்ள 10 அணிகளுக்கும் 5 முக்கிய விதிமுறைகளை மனதில் வைத்து வீரர்களை வாங்க வேண்டியுள்ளது.

2023ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. கொச்சியில் இன்று மதியம் 2.30 மணிக்கு ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெகா ஏலத்தில் இருந்து மினி ஏலம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். 10 அணிகளிடமும் மிக குறைந்த அளவிலேயே மீத தொகை இருக்கும் என்பதால், அதற்கேற்றார் போல வீரர்களை தேர்வு செய்து எடுத்துச்செல்வார்கள்.

5 முக்கிய விஷயங்கள்

5 முக்கிய விஷயங்கள்

ஆனால் இந்தமுறை ஒவ்வொரு அணியும் ஏலம் எடுப்பதற்கு முன்பாக 5 முக்கிய விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதனை ரசிகர்களும் தெரிந்துக்கொண்டால் தான் ஒரு வீரரை எதற்காக எடுக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அப்படி என்ன முக்கிய விஷயங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

கூடுதல் பணம்

கூடுதல் பணம்

கடந்தாண்டு ஒவ்வொரு அணியும் ரூ. 90 கோடி வரை தான் செலவளிக்க முடியும் என கூறப்பட்டது. ஆனால் இந்தாண்டு கூடுதலாக ரூ. 5 கோடியை சேர்த்து ரூ. 95 கோடி செலவளிக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அணிகளிடம் மீதமுள்ள தொகைகளில் 5 கோடி கூட்டப்பட்டுள்ளது.

வீரர்களின் எண்ணிக்கை

வீரர்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் 17 இந்திய வீரர்கள் இருக்க வேண்டும். அதிகபட்சம் 25 வீரர்களுமே இந்தியர்களாக இருக்கலாம். ஆனால் அயல்நாட்டு வீரர்களை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் கிடையாது. ஆனால் அதிகபட்சமாக 8 பேர் வரை மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும்.

எவ்வளவு செலவளிக்கலாம்

எவ்வளவு செலவளிக்கலாம்

ஒவ்வொரு அணிகளிடமும் உள்ள ரூ.95 கோடி பர்ஸ் தொகையை முழுவதுமாக கூட செலவளித்துக்கொள்ளலாம். ஆனால் எவ்வளவு குறைவாக வேண்டுமானாலும் செலவளித்து மிச்சம் செய்யலாம் என செய்ய முடியாது. அனைத்து அணிகளும் தங்களிடம் உள்ள மொத்த தொகையில் 75 சதவீத பணத்தை செலவளித்தே தீர வேண்டும்.

டை பிரேக்கர் திட்டம்

டை பிரேக்கர் திட்டம்

இந்த முறை டை பிரேக்கர் என்ற திட்டம் கொண்டு வரப்படுகிறது. ஒரு வீரரை வாங்க பணம் போதவில்லை என்ற சூழல் வந்தால் டை பிரேக்கரை பயன்படுத்தலாம். இதில் 2 அணிகள் தங்களிடம் உள்ள தொகையை தாண்டி ஒரு பணத்தை எழுதி கொடுக்கலாம். அதில் அதிகம் இருக்கும் அணிக்கு அந்த வீரர் செல்வார். அணிகளிடம் மீதமுள்ள தொகை மட்டுமே அந்த வீரருக்கு செல்லும், மீத தொகைகளை பிசிசிஐ-க்கு தனிப்பட்ட முறையில் அணி நிர்வாகம் தர வேண்டும்.

தவறவிட்டாலும் வாய்ப்பு

தவறவிட்டாலும் வாய்ப்பு

முதற்கட்டமாக 86 வீரர்கள் ஏலமிடப்படுவார்கள். இதில் ஒரு வீரரை வாங்க நினைத்தும் வாங்க முடியாமல் போகலாம். அவர் யாருமே வாங்காமல் போய்யிருந்தால், அடுத்த சுற்றில் அந்த குறிப்பிட்ட வீரர் வேண்டும் என கேட்டு ஏலம் எடுத்துக்கொள்ள முடியும். பல்வேறு அணிகளும் பணத்திற்கு ஏற்ப வாங்கலாம் என சில வீரர்களை வேண்டுமென்றே வாங்காமல் அடுத்த சுற்றில் கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 23, 2022, 12:41 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+