Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே மும்பை அணி இவரையா நீக்கிடுச்சி ? ரன்களை வாரி வழங்கும் 2 வள்ளல்கள் இல்லை.. முழு பட்டியல்

மும்பை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடருக்கான தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் பிசிசிஐயிடம் சமர்பித்துள்ளது.

இதில் தற்போது அனைவரின் கவனமும் 5 முறை சாம்பியனான மும்பை அணி மீது திரும்பியுள்ளது. நாம் ஏற்கனவே பொலார்ட் விடுவிக்கப்பட்டதால், அவர் ஓய்வு பெற்றதை கூறி இருந்தோம்.

தற்போது அடுத்த சீசனில் மும்பை அணி யாரை விடுவித்துள்ளது, யாரை தக்க வைத்துள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

விடுவிப்பு

விடுவிப்பு

கடந்த முறை மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால், கடந்த தொடரில் யார் எல்லாம் சோபிக்க தவறினார்களோ அவர்களை எல்லாம் மும்பை அணி விடுவித்துள்ளது. கடந்த முறை பந்துவீச்சில் சொதப்பி அதிக ரன்களை விட்டு கொடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் உளாட்கட் மற்றும் பாசில் தம்பி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சு மாற்றம்

சுழற்பந்துவீச்சு மாற்றம்

இதே போன்று மும்பை அணியின் சுழற்பந்துவீச்சு பலமாக இருந்த மாயங் மார்கண்டே, சஞ்சய் யாதவ், முருகன் அஸ்வினும் தற்போது எம்.ஐ. நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களான டேனியல் சாம்ஸ், மெர்டித் ஆகியோரை மும்பை அணி விடுவித்துள்ளது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பண்ம் எவ்வளவு இருக்கு?

பண்ம் எவ்வளவு இருக்கு?

சுழற்பந்துவீச்சு அதிரடி ஆல்ரவுண்டரான வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெபியன் ஆலனை மும்பை அணி விடுவித்துள்ளதும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மும்பை அணியிடம் மினி ஏலத்தில் 20 கோடியே 55 லட்சம் ரூபாய் எஞ்சியுள்ளது. இந்த பணத்தை வைத்து மும்பை அணி புதிய சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ரோகித் சர்மா, டிம் டேவிட், ரமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஸ்டப்ஸ், டிவால்ட் பிரவீஸ், ஜோப்ரா ஆர்சர், பும்ரா, அர்ஜூன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திக்கேயா, ஹிரித்திக் சோகின், ஜேசன் பெகுரண்டஃப், ஆகாஷ் மந்த்வால்

Story first published: Tuesday, November 15, 2022, 18:56 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+