Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 - மும்பை அணியின் பிளேயிங் லெவன்.. பலம், பலவீனம் என்ன? ஒரே ஒரு குறை தான் இருக்கு

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை அணி கடந்த முறை பத்தாவது இடத்தை பிடித்து படுதோல்வியை தழுவியது.

கோழைகள் தான் கீழே விழுந்து விட்டால் அப்படியே படுத்து உறங்கி விடுவார்கள்.சாம்பியன்களின் குணமே ஒரு முறை கீழே விழுந்தால் மீண்டும் எழுந்து நின்று போரிடுவது தான்.

அதுவும் புத்திசாலித்தனமான வீரன் நாம் எதனால் தோல்வி அடைந்தோம்.
தோல்வி அடைந்த காரணத்தை எப்படி சரி செய்வது என்று தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் போராடுவான்.

பந்துவீச்சில் அதிரடி

பந்துவீச்சில் அதிரடி

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மினி ஏலத்தை அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த மிகப்பெரிய குறையே பந்துவீச்சு தான். பும்ராவுக்கு பக்கபலமாக யாரும் நிற்காததால் மும்பை அணி பெரும்பான்மையான போட்டிகளில் மண்ணை கவ்வியது. ட்ரெண்ட் போல்ட்டும் இல்லாததால் மாற்று வீரரை தேர்வு செய்து கடந்த சீசனில் அடைந்த தோல்விக்கு தற்போது மும்பை அணி குறையை நிவர்த்தி செய்து இருக்கிறது.

பலம் அதிகரிப்பு

பலம் அதிகரிப்பு

ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பே ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெகுண்டர்சனை மும்பை அணி டிரான்ஸ்பர் வாங்கியது.இந்த நிலையில் காயத்திலிருந்து ஜோப்ரா ஆர்சர் குணமடைந்திருப்பதால் மும்பை அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. ஐபிஎல் மினி ஏலத்தை பயன்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சனை மும்பை அணி தட்டி தூக்கி இருக்கிறது.

பொலார்ட்க்கு பதில் கிரீன்

பொலார்ட்க்கு பதில் கிரீன்

இதன் மூலம் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு மிரட்டலாக இருக்கிறது. மும்பை அணியினர் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக பொலார்டுக்கு பதில் ஆல்ரவுண்டர் கேமரான் கிரீனை 17 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி தூக்கி இருக்கிறது. இதன் மூலம் பேட்டிங் ,பந்துவீச்சு என இருந்த குறையை மும்பை அணி போக்கியிருக்கிறது. தற்போது தொடக்க வீரராக ரோகித் சர்மா களமிறங்குவார்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக திலக் வர்மா, நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் , நடுவரிசையில் ஐந்தாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் பேபி

டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் பிராவிஸ், 6வதாக கேம்ரான் கிரீன் அல்லது டிம் டேவிட், 7வது வீரராக குமார் கார்த்திகேயா, எட்டாவது வீரராக பும்ரா , ஒன்பதாவது வீரமாக ஜோப்ரா ஆச்சர், பத்தாவது வீரராக ஜெய் ரிச்சர்ட்சன் 11 வது வீரராக ஹிரித்திக் சோனேன் அல்லது ஆர்ஸ்த் கானை மும்பை அணி பயன்படுத்தலாம்.

ஒரே ஒரு குறை

ஒரே ஒரு குறை

மும்பை அணியில் குறை என்று ஒன்றும் சொல்ல முடியாது. வேண்டுமானால் நடுவரசையில் மேலும் ஒரு இந்திய வீரர் இருந்தால் மும்பை அணி வீழ்த்தவே முடியாத அணியாக விளங்கி இருக்கக்கூடும். ஹர்திக் பாண்டியாவை இழந்த மும்பை அணி மீண்டும் அந்த இடத்தை நிரப்ப போராடிக் கொண்டிருக்கிறது .குறை என்று சொன்னால் அதை மட்டும்தான் சொல்லலாம்.

பலங்கள்

பலங்கள்

காகிதத்தில் பலமாக இருக்கக்கூடிய மும்பை அணி அதே பலத்தை களத்திலும் காட்டினால் எதிரணிகள் பாவம் தான். பல்வேறு கிரிக்கெட் விமர்சகர் ஐபிஎல் தொடருக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதற்கு முன்பே மும்பை தான் கோப்பையை வெல்லும் என்று கணித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மும்பை அணி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அணியை கட்டமைத்து இருக்கிறது.

Story first published: Saturday, December 24, 2022, 9:57 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+