மும்பை : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடத்துவதை பிசிசிஐ நிறுத்திவிட்டது. இதற்கு காரணம், 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, தொடக்க விழா நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு 10 அணிகள் மீண்டும் சொந்த மண் மற்றும் வெளியூர் என்ற வகையில் போட்டியை நடத்துகிறது.
இதனை கொண்டாடும் விதமாக தான் தற்போது ஐபிஎல் தொடக்க விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற உள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் லேசர் லைட்களை வைத்து, ரசிகர்களை பிசிசிஐ பரவசப்படுத்தியது. தற்போது இம்முறை ஹாலிவுட் லெவலுக்கு பிசிசிஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளது.

நேரம்
மார்ச் 31ஆம் தேதி சரியாக மாலை 6 மணிக்கு ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா நடைபெறுகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் முன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் நிலையில்,அதன் பிறகு 7 மணிக்கு டாஸ் மற்றும் 7.30 மணிக்கு ஆட்டமும் தொடங்கப்படும். இந்த தொடக்க விழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியிலும், ஜியோ சினிமா ஆப்பிலும் பார்க்கலாம்.
பங்குபெறும் நட்சத்திரங்கள்
இதே போன்று பிரபல திரைப்பட நட்சத்திரங்களும் தொடக்க விழாவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் வாரிசு திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கும் தமன்னா, பாலிவுட் நடிகை கேத்ரினா கையிப், நடிகர் டைகர் செரஃப் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சம்
இதே போன்று அர்ஜித சிங்கின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ட்ரோன் மூலம் லைட்களை எறியூட்டு, அதனை ஐபிஎல் கோப்பை போன்ற வடிவத்தில் மைதானத்தில் மேலே இருந்து பறந்து வருவது போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது. அதாவது ஆகுமெண்ட் ரியாலிட்டி போன்ற வகையில், டிரோன் வைத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
கேப்டன்கள் அறிமுகம்
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள அனைத்து கேப்டன்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். இதன் பிறகு , போட்டியை சரியான முறையில் விளையாடுவதற்கான உறுதி மொழியை ஒவ்வொரு அணி சார்பாகவும் கேப்டன்கள் ஏற்று, அதற்காக கையெழுத்திடுகிறார்கள்.