For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடக்க விழாவில் ஜூனியர் ஜெய்ஷா.. குடும்பத்துடன் வந்த பிசிசிஐ நிர்வாகிகள்

அகமதாபாத் : ஐபிஎல் 16வது சீசன் தொடக்க விழா கோலாகலமாக அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு சொந்த மண், வெளியூர் என்ற பாணியில் 12 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக, பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் பாலிவுட் நடிகர் ஆர்ஜித் சிங் தொடர்ந்து ஹிந்தி பாடல்களை பாடினார். ஆனால், அதனை எல்லாம் நாம் கேட்டதே இல்லை என்பதால் தமிழக ரசிகர்களுக்கு போர் அடித்தது.

 IPL 2023 opening ceremony - Jay shah with his family in attendance

எனினும் தோனிக்காக ரசிகர்கள் பொறுத்து கொண்டு இருந்தனர். மேலும் இந்த பாடல் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஹிந்தி பாடல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது, நம்ம ரசிகர்கள் தமன்னா, ராஷ்மிகா நடனத்திற்காக காத்து கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் , இந்த நிகழ்ச்சிக்கு ஜெய்ஷா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார். ஒவ்வொரு ஹிந்தி பாடல்களையும், தனது மனைவியுடன் ரொமான்டிக்காக கேட்டு ரசித்து கொண்டு இருந்தார். ஜெய்ஷாவின் மகளும் தந்தையுடன் அமர்ந்து கொண்டுள்ளார். இந்த மைதானத்தில் தற்போது கிட்ட தட்ட 1 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர்.

Story first published: Friday, March 31, 2023, 18:49 [IST]
Other articles published on Mar 31, 2023
English summary
IPL 2023 opening ceremony - Jay shah with his family in attendance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+