மொஹாலி : ஐபிஎல் தொடர் என்றாலே கிரிக்கெட் ஆக்ஷன் என அனைத்தையும் தாண்டி, அதில் இடம்பெறும் பெண்களுக்கு என்று தனி ரசிகர்களே இருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணி காவ்யா மாறன் , ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.
அதிலும் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். நெஞ்சினிலே, நெஞ்சினிலே என்று உயிரே படத்தில் நாம் பார்த்த பிறகு, நமது நெஞ்சிலேயே குடி இருந்துவிட்டார் ப்ரீத்தி ஜிந்தா. ப்ரீத்தி ஜிந்தா எப்போதும் பஞ்சாப் அணி விளையாடும் போட்டியில் வந்து விடுவார்.

பஞ்சாப் அணியின் சக உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா போட்டியுடன் ஒன்றி போய், தங்களது அணி வீரர்களுக்கு ஒரு சியர் லீடராகவே மாறிவிடுவார். இதே போன்று பஞ்சாப் அணி சரியாக விளையாடவில்லை என்றாலும் தனது முகத்தில் அதிருப்தியை காட்டி விடுவார்.
இவருடைய ரியாக்சனை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பஞ்சாப் அணியின் போட்டியை மிஸ் செய்ய மாட்டார்கள். இந்த நிலையில், பஞ்சாப் அணியின் இன்றைய லீக் ஆட்டத்தை காண ப்ரீத்தி ஜிந்தா வந்தார். ஆனால், அவருடைய அடையாளமான அந்த கொழு கொழு கன்னம் கொஞ்சமும் காணவில்லை.

ஆளே அடையாளம் தெரியாத வகையில் ஒல்லியாக மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆனார்கள். ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தற்போது 48 வயதான நிலையில், அதன் முதிர்ச்சி தற்போது அவரது முகத்தில் தெரிகிறது.