Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2023: ஷிகர் தவானுக்கு காயம்.. பஞ்சாப் கேப்டனாக வந்த சுட்டிக் குழந்தை.. லக்னோ முதலில் பேட்டிங்!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் இன்றையப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 21 போட்டியில் லக்னோ - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து பிரம்மாண்ட வெற்றிகளை பெற்று வரும் லக்னோ அணியை எதிர்த்து இரு போட்டிகளில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி விளையாடுகிறது. இதனிடையே தோளில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கவில்லை. இதனால் பஞ்சாப் அணியின் பேட்டிங் பின்னடைவை சந்தித்துள்ளது.

IPL 2023: Punjab Captain Sam Curran won the toss and choose to bowl against Lucknow

அதேபோல் பஞ்சாப் அணியால் ரூ.18.5 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட சாம் கரண் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். லக்னோ மைதானத்தின் சிகப்பு பிட்ச்சில் ஆட்டம் நடப்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பஞ்சாப் அணி சேஸிங் செய்யவுள்ளது.

ஷிகர் தவான் இல்லாததால், அதர்வா டைட் மற்றும் ஹர்ப்ரீத் சிங் பாட்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த போட்டியில் மோசமாக ஆடிய பனுகா ராஜபக்சே நீக்கப்பட்டு சிக்கந்தர் ராசா சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணி சார்பாக உனாத்கட் நீக்கப்பட்டு யுதுவிர் சிங் சரக் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இளம் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பஞ்சாப் அணி விவரம்: அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராசா, சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, ஹர்பிரீத் பரார், ககிசோ ரபாடா, ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்

லக்னோ அணி விவரம்: கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருணால் பாண்டியா, பூரன், ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், யுதுவிர் சிங் சரக், மார்க் வுட், ரவி பிஷ்னாய்

Story first published: Saturday, April 15, 2023, 19:13 [IST]
Other articles published on Apr 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+