கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. கொல்கத்தா அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 6 தோல்வி, 4 வெற்றிகளுடன் உள்ளது. இதனால் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் நிச்சயம் கொல்கத்தா அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு முடிவுக்கு வரும். இதனால் வாழ்வா, சாவா போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி சொந்த மண்ணில் களமிறங்கியுள்ளது.

இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் உள்ளது. சென்னை அணியை சொந்த மண்ணில் வீழ்த்தினாலும், மும்பை அணியிடம் மொஹாலியிலேயே தோல்வியடைந்தது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் வெற்றிப்பாதைக்கு பஞ்சாப் அணி திரும்பாவிட்டால் அந்த அணியில் பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கல்தான். இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணி சார்பாக மேத்யூ ஷார்ட் நீக்கப்பட்டு பனுகா ராஜபக்சே சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் பஞ்சாப் அணி களமிறங்கியுள்ளதால், பந்துவீச்சின் போது நேதன் எல்லீஸ் இம்பேக்ட் பிளேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணி சார்பாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பஞ்சாப் அணி விவரம்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், பனுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, சாம் கரண், ஷாரூக் கான், ஹர்ப்ரீத் பரார், ரிஷி தவான், ராகுல் சஹர், அர்ஷீப் சிங்
கொல்கத்தா அணி விவரம்: குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, சுயஷ் பிரபுதேசாய், வருண் சக்கரவர்த்தி