Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வந்துட்டான்யா சிங்கக்குட்டி" சொந்த மண்ணில் களமிறங்கிய ஷிகர் தவான்.. லக்னோ முதலில் பேட்டிங்!

மொஹாலி: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் கண்டுள்ளது. அதேபோல் லக்னோ அணியும் 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

IPL 2023: Punjab Kings won the toss and chose to bowl against Lucknow Super Giants

அதுமட்டுமல்லாமல் கடந்த போட்டியில் லக்னோ அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற ஷிகர் தவான், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணி தரப்பில் மேத்யூ ஷார்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக களமிறங்காமல் இருந்த ககிசோ ரபாடாவும் அணியுடன் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குர்னூர் பரார் என்ற புதிய வேகப்பந்துவீச்சாளரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். லக்னோ அணி தரப்பில் மார்க் வுட் மீண்டும் களமிறக்கப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடனே லக்னோ அணி களமிறங்கியுள்ளது.

லக்னோ அணி விவரம்: கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், யாஷ் தாக்கூர்

பஞ்சாப் அணி விவரம்: அதர்வா டைட், ஷிகர் தவான், சிக்கந்தர் ராசா, லியம் லிவிங்ஸ்டன், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக் கான், ரபாடா, ராகுல் சஹர், குர்னூர் பரார், அர்ஷ்தீப் சிங்

Story first published: Friday, April 28, 2023, 19:14 [IST]
Other articles published on Apr 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+