Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs RR - ஒரு கேட்ச் பிடிக்க 4 வீரர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்.. ஏன் பா இப்படி காமெடி பண்றீங்க

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெரும் காமெடி ஒன்று நிகழ்ந்துள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தானும், மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத் அணியும் பலப்பரீச்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வ செய்தது.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட குஜராத் அணி முயற்சி செய்தது. விரித்மான் சாஹா ஒரு பவுண்டரி அடித்த நிலையில், ஆட்டத்தின் 3வது பந்தை விரித்திமான் சாஹா தூக்கி அடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்து மேலே சென்றது.

IPL 2023 - Rajasthan Royals did a comedy while taking a catch

இந்த பந்தை பிடிக்க விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், சிம்ரன்ஹேட்மயர் மற்றும் இனனொரு வீரரும் வர, பந்துவீச்சாளர் போல்ட் அருகில் நின்றார். அப்போது, ஹேட்மயரிடம் செல்ல இருந்த பந் சசு சாம்சன் பிடிக்க முயன்றார். அப்போது பந்த சஞ்சு சாம்சன் கையுறையில் இருந்து வெளியே வர, ங்கிருந்த 3 வீரரும் மிஸ் செய்தனர்.

எனினும் அருகில் நின்ற போல்ட், 3 வீரர்களும் மிஸ் செய்த பந்தை கேட்ச் பிடித்தார். 4 வீரர்களும் ஒரு பந்துக்காக போட்டி போட்டு பிடிக்க முயன்று விட்டதை அங்கிருந்த ஜாஸ் பட்லர் தலையில் கை வைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து சாய் சுதர்சன் பொறுமையாக விளையாட 19 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் பவர்பிளேவில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது. தற்போது ஹர்திக் பாடியா மற்றும் சுப்மன் கில் ஜோடி கியோர் விளையாடி வருகின்றனர்.இந்தப் போட்டியை வெல்லும் அணி முதல் இடத்தில் புள்ளி பட்டியலில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 16, 2023, 20:20 [IST]
Other articles published on Apr 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+