Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனுக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான்.. ஆடம் ஷாம்பா சேர்ப்பு!

ஜெய்ப்பூர்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடம் உள்ளது. இருப்பினும் கடைசி 4 ஆட்டங்களில் 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.

IPL 2023: Rajasthan Royals won the toss and chose to bat against Gujarat Titans

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும் டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதேபோல் பிட்ச் எப்படி செயல்படும் என்பது சரியாக பிடிபடாததால் ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டு, ஆடம் ஷாம்பா சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியை பொறுத்தவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

IPL 2023: Rajasthan Royals won the toss and chose to bat against Gujarat Titans

ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர், துருவ் ஜுரெல், அஸ்வின், போல்ட், ஆடம் ஷாம்பா, சந்தீப் சர்மா, சாஹல்

குஜராத் அணி விவரம்: சாஹா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அஹ்மத், முகமது ஷமி, லிட்டில்

Story first published: Friday, May 5, 2023, 19:15 [IST]
Other articles published on May 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+