Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தலைவன் வரான்டா" அறிமுகமாகும் ஜோ ரூட்.. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்.. ஹாரி ப்ரூக்கை நீக்கிய SRH!

ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. அடுத்தடுத்து இரு போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளதால், 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலேயே நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.

IPL 2023: Rajasthan Royals won the toss and chose to bat against Hyderabad

இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணி சார்பாக ஜோ ரூட் அறிமுகமாகிறார். கடந்த போட்டியில் குறைந்த எண்னிக்கையிலான இலக்கை ராஜஸ்தான் அணி நிர்ணயித்திருந்தது. அந்த பேட்டிங் வரிசையில் ஜோ ரூட் இருந்திருந்தால், பெரிய இலக்கை நிர்ணயிக்க முடிந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் ராஜஸ்தான் அணி மாற்றம் செய்துள்ளது.

இன்னொரு பக்கம் ஐதராபாத் அணி சார்பாக ஹாரி ப்ரூக் நீக்கப்பட்டு கிளென் பிலிப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரேயொரு சதம் விளாசிவிட்டு 9 போட்டிகளில் ஆடியுள்ள ஹாரி ப்ரூக் மொத்தமாக 163 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மிடில் ஆர்டரில் அவர் ஆட்டமிழப்பதால், ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் ஐதராபாத் அணி சிறப்பான மாற்றத்தை செய்துள்ளது.

ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ஜோ ரூட், துருவ் ஜுரெல், ஹெட்மயர், அஸ்வின், முருகன் அஸ்வின், சந்தீப் சர்மா, குல்திப் யாதவ், சாஹல்

ஐதராபாத் அணி விவரம்: அபிஷேக் சர்மா, ராகுல் த்ரிப்பாட்டி, எய்டன் மார்க்ரம், கிளாஸன், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், மார்கோ யான்சன், விவ்ராந்த் சர்மா, மயங்க் மார்க்கண்டே, புவனேஷ்வர குமார், நடராஜன்

Story first published: Sunday, May 7, 2023, 19:17 [IST]
Other articles published on May 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+