Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ஹல்லா போல் கொஞ்சம் நல்ல பவுல்” ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கம்.. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

தரம்சாலா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துவிட்டது. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.இந்த நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் எடுத்து 8வது இடத்தில் இருக்கிறது.

IPL 2023: Rajasthan Royals won the toss and chose to bowl against PBKS

அதேபோல் ராஜஸ்தான் அணியும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் அடுத்தப் போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் பஞ்சாப் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் அஸ்வின் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை, அதேபோல் பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. தரம்சாலா மைதானத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருக்காது என்பதால், ஆட்டம் ஹை ஸ்கோரிங் த்ரில்லராகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், ஆடம் ஷாம்பா, போல்ட், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, சாஹல்

பஞ்சாப் அணி விவரம்: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், அதர்வா தய்டே, லிவிங்ஸ்டன், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹர், ரபாடா, அர்ஷ்தீப் சிங்

Story first published: Friday, May 19, 2023, 19:20 [IST]
Other articles published on May 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+