Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பச்சை ஜெர்சி" பெங்களூரு மண்ணில் கேப்டனாக களமிறங்கிய விராட் கோலி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்!

பெங்களூரு: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

IPL 2023: Rajasthan Royals won the toss and chose to bowl against RCB at Chinnaswamy Stadium

அதற்காக இன்றையப் போட்டியில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கியுள்ளது. இன்றையப் போட்டியிலும் காயத்தில் இருந்து டூ பிளஸிஸ் முழுமையாக குணமடையாததால், விராட் கோலி கேப்டனாக களமிறங்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணிக்கு தலைமையேற்றுள்ளார் விராட் கோலி. இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டாஸ் தோல்வி குறித்து விராட் கோலி கூறுகையில், டாஸ் வென்றால் நாங்களும் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்போம் என்று கூறினார். அதேபோல் ஆர்சிபி அணி சார்பாக பார்னல் நீக்கப்பட்டு டேவிட் வில்லி சேர்க்கப்பட்டுள்ளார். சின்னசாமி மைதானம் என்பதால், ஆர்சிபி அணி அனுபவத்தின் அடிப்படையில் டேவிட் வில்லியை தேர்வு செய்துள்ளது.

IPL 2023: Rajasthan Royals won the toss and chose to bowl against RCB at Chinnaswamy Stadium

ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ், லோம்ரோர், மேக்ஸ்வெல், ஷாபாஸ் அஹ்மத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, ஹசரங்கா, சிராஜ், விஜய்குமார்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: ஹர்சல் படேல், ஃபின் ஆலன், ஆகாஷ் தீப், கரண் சர்மா, அனுஜ் ராவத்

ராஜஸ்தான் அணி விவரம்: பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர், ஜுரல், அஸ்வின், ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: டோனவன் ஃபெரேரா, முருகன் அஸ்வின், ஆகாஷ், ஆசிஃப், அப்துல் பசித்

Story first published: Sunday, April 23, 2023, 15:16 [IST]
Other articles published on Apr 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+