For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2023: "இடியவே இடிக்க பார்க்குறாங்க" குட்டி மலிங்காவை களமிறக்கிய தோனி.. ஆர்சிபி பந்துவீச்சு!

பெங்களூரு: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது. இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 மற்றும் 7 ஆகிய இடங்களில் உள்ளனர். இதனால் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று எந்த அணி அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டின் இரு முக்கிய அடையாளமான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி இருவரும் கடைசியாக ஒருமுறை மைதானத்தில் நேருக்கு நேர் போட்டி போட உள்ளனர். இந்த நிலையில் சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் ஆடவுள்ளது. பெங்களூரு அணி கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.

அதேபோல் சென்னை அணி சார்பாக மகாளா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் "குட்டி மலிங்கா" பதிரானாவை களமிறக்கவுள்ளது. டாஸ் போடுவதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி மைதானத்தில் களமிறங்கிய நொடி முதலே ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை தொட்டது. எம்எஸ் தோனி பேசிய சில நொடிகள் அருகில் இருப்பவருக்கு கூட கேட்க முடியாத அளவிற்கு ரசிகர்களின் உற்சாகம் இருந்தது.

IPL 2023: RCB Captain Du Plessis won the toss and chose to bowl against CSK in Chinnaswamy Stadium

சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ரஹானே, மொயின் அலி, ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா

ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ், லோம்ரோர், மேக்ஸ்வெல் ஷாபாஸ் அஹ்மத், தினேஷ் கார்த்திக், ஹர்சல் படேல் ஹசரங்கா, பார்னல், விஜய்குமார் வைஷாக், சிராஜ்

Story first published: Monday, April 17, 2023, 19:10 [IST]
Other articles published on Apr 17, 2023
English summary
IPL 2023: RCB won the Toss and Chose to bowl against CSK in Chinnaswamy Stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+