Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023: 3 பந்துகள்.. மொத்தமாக டெல்லி பக்கம் திரும்பிய ஆட்டம்.. ஆர்சிபி அணி 174 ரன்கள் குவிப்பு!

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணி சார்பாக குல்தீப் யாதவ் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் ஆர்சிபி அணி சார்பாக டேவிட் வில்லி நீக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா சேர்க்கப்பட்டார். அதேபோல் இளம் வீரர் வைஷக் விஜய்குமாரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அணி சார்பாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டு ரோவ்மன் பவல் நீக்கப்பட்டார்.

RCB set a target of 175 runs for Delhi Capitals in IPL 2023

இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி சார்பாக டூ பிளஸிஸ் - விராட் கோலி கூட்டணி தொடக்க வீரர்களாக காளமிறங்கியது. இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், ஆமான் கானின் அற்புதமான கேட்ச்சால் டூ பிளஸிஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியின் கட்டுப்பாட்டுக்குள் ஆட்டம் சென்றது. தொடர்ந்து பவுண்டரிகளாஇ விளாசிய விராட் கோலி, 33 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பின்னர், ஃபுல் டாஸ் பந்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்து விராட் கோலி 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

RCB set a target of 175 runs for Delhi Capitals in IPL 2023

இதன்பின்னர் வந்த மேக்ஸ்வெல், ஆர்சிபி அணியின் அதிரடியை தொடர்ந்தார். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் இளம் வீரர் லோம்ரோர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, திடீரென ஹர்சல் படேல் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக்கை கடைசி நேரத்தில் பயன்படுத்தும் திட்டத்திற்காக ஹர்சல் களமிறக்கப்பட்டார். ஆனால் ஹர்சல் படேல் 6 ரன்களில் அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து குல்தீப் யாதவ் வீசிய 14அது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

RCB set a target of 175 runs for Delhi Capitals in IPL 2023

இதையடுத்து களம் புகுந்த தினேஷ் கார்த்திக் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேற, ஆர்சிபி அணி 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதையடுத்து இளம் வீரர்களான ஷாபாஸ் அஹ்மத் - அனுஜ் ராவத் இணை களத்தில் இருந்தது. நிதானமாக ஆடிய இந்த கூட்டணியால் 18 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 154 ரன்கள் சேர்த்தது. பின்னர் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் வீசிய 19வது ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 எடுத்தது. டெல்லி அணி சார்பாக மிட்செல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Saturday, April 15, 2023, 17:21 [IST]
Other articles published on Apr 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+