Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னயா கோலியவே ஸ்லெட்ஜிங் பண்ற.. அவுட்டாகி நடந்து சென்ற கிங்.. இஷாந்த் சர்மா கொடுத்த சேட்டை!

பெங்களூர் : ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா, உற்சாகத்தில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் விளையாட டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு தடை விதிக்கப்பட்டதால், பொறுப்பு கேப்டனாக அக்சர் படேல் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் டாஸ் வென்ற அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார்.

IPL 2023 RCB vs DC Ishant sharma dismissed Virat Kohli for 27 runs and sledged him after pumped celebration at Bangalore

இதன்பின் ஆர்சிபி அணிக்காக டூ பிளசிஸ் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணி தரப்பில் முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். தொடக்க காலம் முதல் ரஞ்சி டிராபி வரை இஷாந்த் சர்மா, விராட் கோலி இணைந்து விளையாடி இருப்பதால், இருவருக்கும் இடையிலான போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து விராட் கோலி அதிரடியை தொடங்கினார். இதன்பின் மீண்டும் 4வது ஓவரை வீச இஷாந்த் சர்மா வந்தார். இதன் ஓவரின் முதல் இரு பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசினார் விராட் கோலி. ஆனால் 4வது பந்திலும் பவுண்டரி அடிக்க விராட் கோலி பேட்டை ஓங்க, அது எட்ஜாகி விக்கெட் கீப்பர் அபிஷேக் போரெல் கைகளுக்கு சென்றது.

இதனால் விராட் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இஷாந்த் சர்மா உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கொண்டாடினார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி பெவிலியன் நோக்கி நடந்து சென்ற போது, அவரை இடித்து ஜாலியாக ஸ்லெட்ஜிங் செய்தார். இதனால் ஜாலியான விராட் கோலியும் சிரித்து கொண்டே நடந்து சென்றார்.

எந்த வீரர் ஸ்லெட்ஜிங் செய்தாலும், ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும் விராட் கோலி உடனடியாக பதிலடி கொடுப்பார். ஆனால் இஷாந்த் சர்மா ஸ்லெட்ஜிங் செய்த போது ஜாலியாக நடந்து சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவும் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Sunday, May 12, 2024, 20:49 [IST]
Other articles published on May 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+