Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB பிளே ஆப் கனவு அம்பேல்? பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை.. போட்டி ரத்தானால் என்ன ஆகும்

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சிஎஸ்கே, லக்னோ ஆகிய ஆணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காவது இடத்திற்கு மும்பை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆர்சிபி அணி தற்போது 14 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணியை பொறுத்தவரை அவர்களும் 14 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள். தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் அவர்கள் 16 புள்ளிகள் எடுத்து விடுவார்கள்.

IPL 2023 - RCB vs GT on the verge of abandoned due to bengaluru extreme rains

ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் மும்பை வென்றால் rcb தங்களது கடைசி ஆட்டத்தில் கட்டாயமாக வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த நிலையில் பெங்களூரில் இன்று கடுமையாக மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆடுகளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் ஆர் சி பி, குஜராத் அணிகள் மோதும் கடைசி ஆட்டம் நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.அப்படி நடக்க மும்பை அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் 16 புள்ளிகள் உடன் அவர்கள் பிளே ஆப் சென்று விடுவார்கள்.ஒருவேளை மும்பை தோற்று ஆர் சி பி அணிக்கு மழையின் காரணமாக ஒரு புள்ளி கிடைத்தால் அவர்கள் பிளே ஆப் க்கு சென்று விடுவார்கள்.

இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மும்பை தோற்க வேண்டும் என ஹைதராபாத்துக்காக ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த நிலையில் மும்பையில் வான்கடே மைதானம் எளிதாக சேசிங் செய்யக்கூடியதாகும். தற்போது அவர்கள் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதால் ஹைதராபாத் அணி எவ்வளவு ரன்களை அடித்தாலும், அதனை எளிதாக கடக்கக்கூடிய வல்லமையை மும்பை பெற்றிருக்கிறார்கள்.இதனால் ஆர் சி பி அணியின் பிலே ஆப் வாய்ப்பு மங்கும் நிலையில் இருக்கிறது.

Story first published: Sunday, May 21, 2023, 16:38 [IST]
Other articles published on May 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+