Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2023: மீண்டு வந்த ஹேசல்வுட்.. டாஸ் வென்ற டூ பிளஸிஸ் பேட்டிங் தேர்வு.. பழிதீர்க்குமா ஆர்சிபி?

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய போது, கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் இன்றையப் போட்டியில் லக்னோ அணியிடம் அடைந்த தோல்விக்கு பெங்களூரு அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: RCB won the toss and Captain Du Plessis chose to bat against Lucknow

அதுமட்டுமல்லாமல் விராட் கோலியை எதிர்த்து குட்டி கோலி என்று அழைக்கப்படும் கேஎல் ராகுல் விளையாடப் போகிறார். பெங்களூரு அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் இருப்பதால், இன்றைய நாளில் பெங்களூரு அணி வெற்றிபெற வேண்டிய சூழலில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால், பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் மோசமாகும்.

இந்த நிலையில் டூ பிளஸிஸ் மீண்டும் ஆர்சிபி கேப்டனாக களமிறங்கியுள்ளார். இதையடுத்து டாஸ் வென்ற டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியில் ஹேசல்வுட், கரண் சர்மா மற்றும் அனுஜ் ராவத் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஷாபாஸ் அஹ்மத் மற்றும் ஹர்சல் படேல் நீக்கப்பட்டுள்ளனர். லக்னோ அணி சார்பாக ஆவேஷ் கான் காயம் காரணமாக நீக்கப்பட்டு கே கவுதம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ், அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், ஹசரங்கா, கரண் சர்மா, சிராஜ், ஹேசல்வுட்

லக்னோ அணி விவரம்: கேஎல் ராகுல், கல் மேயர்ஸ், தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, பூரன், கே கவுதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர்

Story first published: Monday, May 1, 2023, 19:12 [IST]
Other articles published on May 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+