Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”தலைவன் வந்துட்டான்யா” ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் கேதர் ஜாதவ்.. டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங்!

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 50வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இதனால் குஜராத் அணியை வீழ்த்தி ஃபார்முக்கு வந்துள்ள டெல்லி அணி, இந்தப் போட்டியில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: RCB won the toss and chose to bat against Delhi

இந்த நிலையில் டெல்லியில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பெங்களூரு அணியை பொறுத்தவரை சுயஷ் பிரபுதேசாய் நீக்கப்பட்டு கேதர் ஜாவத் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி அணியை பொறுத்தவரை அன்ரிக் நார்கியே சொந்த காரணங்களுக்காக ஊருக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் முகேஷ் குமார் இணைந்துள்ளார்.

டெல்லி அணி இன்றையப் போட்டியில் தோல்வியடைந்தால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி அணியை ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆர்சிபி அணி வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்கு செல்லும். இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் இந்த போட்டியை தீவிரமாக பார்த்து வருகின்றனர்.

பெங்களூரு அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ், அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாவத், ஹசரங்கா, கரண் சர்மா, சிராஜ், ஹேசல்வுட்

டெல்லி அணி விவரம்: டேவிட் வார்னர், சால்ட், மிட்செல் மார்ஷ், ரூசோவ், மணீஷ் பாண்டே, அமான் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அஹ்மத்

Story first published: Saturday, May 6, 2023, 19:14 [IST]
Other articles published on May 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+