For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.13 கோடி போச்சே.. சோகத்தில் மூழ்கிய காவ்யா மாறன்..அடி பாதளத்திற்கு சென்ற SRH ரன்ரேட்.. RR அபாரம்

ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்ன் மூலம் ஐதராபாத் அணியின் ரன் ரேட் அடி பாதளத்திற்கு சென்றுள்ளது. ஐபிஎல் மினி ஊலத்தில் காவ்யமா மாறன் தலைமையிலான ஐதராபாத் அணி, பணத்தை இரைத்து பல வெளிநாட்டு விரர்களை வாங்கியது.

இதில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புருக்கை 13 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து காவ்யா மாறன் எடுத்தார். அதுக்கு தகுந்தார் போல், ஹாரி புருக்கும் செம பார்மில் இருந்தார். இதனால் ஹாரி புருக், இம்முறை பெரிய அளவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

IPL 2023 - RR Beat SRH by 72 runs and orange army run rate takes a dive

ஹாரி புருக் திறமைக்கு தீனி போடும் அளவுக்கு ரன் குவிப்புக்கு சாதகமான மைதானத்தில் ராஜஸ்தான் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடக்க வீரராககளமிறங்கிய அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். ராகுல் திரிபாதியும் டக் அவுட்டாக, ஹொரி புருக் களத்துக்கு வந்தார்.

ஆனால் புருக், ஆர்ஆர் வீரர்களின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். ஒரு கட்டத்தில் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டமே எடுத்த புருக் சாஹல் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். வாசிங்டன்சுந்தர் 1 ரன்னிலும், கிளன் பிலிப்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தார். மாயங் அகர்வால் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் உம்ரான் மாலிக் 19 ரன்களும், அப்துல் சமாத் 32 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 8 விக்கெட் தோல்வியை தழுவியது. இதனால் காவ்யா மாறனின் பூ போன்ற முகம் வாடி விட்டது. முன்னதாக பட்லர், சஞ்சு சாம்சன், ஜெய்ஷ்வால் ஆகியோர் அரைசதம் அடித்தால் ராஜஸ்தான் அணி 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Story first published: Sunday, April 2, 2023, 19:35 [IST]
Other articles published on Apr 2, 2023
English summary
IPL 2023 - RR Beat SRH by 72 runs and orange army run rate takes a dive ரூ.13 கோடி போச்சே.. சோகத்தில் மூழ்கிய காவ்யா மாறன்..அடி பாதளத்திற்கு சென்ற SRH ரன்ரேட்.. RR அபாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+