Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”யாரும் எதிர்பார்க்கலைல” ரஷித் கான் பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ்.. வெறியாட்டம் ஆடிய சஞ்சு சாம்சன்!

அகமதாபாத்: குஜராத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் பந்துவீச்சில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக மில்லர் 46 ரன்களும், சுப்மன் கில் 45 ரன்களும் விளாசினர்.

IPL 2023: RR Captain Sanju Samson hits a hat trick sixes against Gujarat bowler Rashid khan

இமாலய இலக்கு இல்லை என்பதால் ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவர் பிளே ஓவர்களில் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அபாரமாக பந்துவீசினர். ஒவ்வொரு பந்தும் எந்தப் பக்கம் ஸ்விங் ஆகும் என்பது தெரியாமல் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 26 ரன்களிலும், ரியான் பராக் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 10.3 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை ஆடினார். 11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த சூழலில் அதிரடியாக ஆட வேண்டிய சூழலுக்கு சஞ்சு சாம்சன் - ஹெட்மயர் இணை தள்ளப்பட்டது.

ஆனால் டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான ரஷித் கான் பந்துவீசினார். இதனால் பலரும் ரஷித் கானை சஞ்சு சாம்சன் அட்டாக் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படியே ஆடினாலும் அடிப்பதற்கு சரியான பிளான் வேண்டும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சன் தனது பாணியில், "அடிப்பது தான் பிளானே" என்று ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து 29 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மற்றொரு ஆஃப்கானிஸ்தான் வீரரான நூர் அஹ்மத் வீசிய பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். இதையடுத்து மீண்டும் சிக்சர் அடிக்க முயன்று சஞ்சு சாம்சன் 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் ரஷித் கான் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை சஞ்சு சாம்சன் விளாசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ரஷித் கானை ஐபிஎல் தொடரில் வாட்சன், கிறிஸ் கெய்ல், ராயுடு போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே சில முறை அட்டாக் செய்துள்ளனர்.

அதேபோல் கிறிஸ் கெய்ல் மட்டுமே ரஷித் கானை ஹாட்ரிக் சிக்சர் அடித்துள்ளார். அந்த வகையில் ரஷித் கானை அச்சமின்றி சஞ்சு சாம்சன் அட்டாக் செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறிய சஞ்சு சாம்சன் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் கம்பேக் கொடுத்ததால், பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, April 16, 2023, 23:11 [IST]
Other articles published on Apr 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+