தர்மசாலா : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் உள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் பிராப்சிம்ரன் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேப்டன் ஷிகர் தவான் 17 ரன்களும், அதர்வா 19 ரன்களும் எடுத்து, அடுத்தடுத்து வெளியேற, லியாம் லிவிங்ஸ்டோன் 9 ரன்களுக்கு வெளியறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர், நடப்பு சீசனில் 5வது முறையாக டக் அவுட் ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் வெளியேற, இளம் வீரர்கள் ஜெய்ஷ்வால் மற்றும் படிக்கல்லும் அபாரமாக விளையாடி பதிலடி கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், முக்கிய கட்டத்தில் வெளியேறினர்.
இறுதியில் ஹேட்மயர் 28 பந்துகளில் 46 ரன்கள் விளாச, ரியான் பராக் 20 ரன்களும், துருவ் ஜூரல் 4 பந்தில் 10 ரன்களும் எடுக்க, ராஜஸ்தான் அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் கேகேஆர், ஆர்சிபி மற்றும் மும்பை அணி கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும். இதில் ஆர்சிபி மற்றும் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால், ராஜஸ்தானுக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும்.