Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியே சிஎஸ்கே vs குஜராத்.. முழு பட்டியலை இங்கு காணலாம்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முழு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது பிசிசிஐ. முதல் போட்டியிலேயே இரு பெரும் அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

ஐபிஎல் 16வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த முறை ஹோம் மைதானம் மற்றும் வெளி மைதானம் என இரண்டிலும் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பை மேலும் ஒருபடி உயர்த்தும் அளவிற்கு ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் அட்டவணை

ஐபிஎல் அட்டவணை

இந்த சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இறுதிப்போட்டி மே 21ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் தோனியின் சிஎஸ்கே அணியும் பலப்ப்ரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறாது. ஏப்ரல் 1ம் தேதியன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பிற்பகலிலும் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மாலையிலும் மோதவுள்ளன.

மும்பை ஆட்டம் எப்போது?

மும்பை ஆட்டம் எப்போது?

அதிக ரசிகர்கள் படையை கொண்ட ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதியன்று மோதவுள்ளன. ஸ்பெஷல் விஷயமாக ஐபிஎல் தொடங்கிய முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து அணிகளுமே தங்களது முதல் போட்டியில் விளையாடி முடித்துவிடுவார்கள். ரசிகர்கள் எப்போதுமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடக்கத்திலேயே மோதுகின்றன.

சிஎஸ்கே - மும்பை போட்டி

சிஎஸ்கே - மும்பை போட்டி

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் மோதல் ஏப்ரல் 8ம் தேதியன்று மும்பையில் நடைபெறுகிறது. இரண்டாவது மோதல் சிஎஸ்கேவின் கோட்டையான சேப்பாக்கத்தில் வரும் மே 6 தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் 3ம் தேதியன்றே தோனியின் வருகையை சென்னை ரசிகர்கள் காணலாம்.

 கூடுதல் மைதானம்

கூடுதல் மைதானம்

இந்த முறை ஐபிஎல் தொடருக்காக கூடுதல் மைதானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது 10 அணிகளுக்கும் ஒவ்வொரு ஹோம் மைதானம் போக, தரம்சாலா மற்றும் கவுகாத்தி மைதானங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மைதானத்தின் பட்டியலை இங்கு காண்போம்.

அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர், மும்பை, கவுகாத்தி, தரம்சாலா

Story first published: Friday, February 17, 2023, 17:40 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+