IPL 2023 Fixing ? சிஎஸ்கே தோற்றுவிட்டதாக மைதானத்தில் வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
அகமதாபாத் : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது சிஎஸ்கே அணியும் குஜராத் அணியும் பல பரிட்சை நடத்த உள்ளன.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் ஆடுகளத்தில் சிஎஸ்கே ரன்னர் அப் என்ற பெரிய ஸ்கிரீனில் போடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

போட்டி முடிந்த பிறகு ஒளிபரப்ப கூடிய புகைப்படத்தை முன்கூட்டியே எவ்வாறு ஒளிபரப்பப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் பிக்சிங்காக இருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் சிஎஸ்கே அணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.
அதில் ஒரு ரசிகர் படத்தின் டிரைலரை வெளியிடுவதற்கு பதில் தெரியாமல் கிளைமாக்ஸ் வெளியிட்டு விட்டார்கள் என்று கிண்டல் அடித்திருக்கிறார். மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் இம்முறை தோற்றுவிடுவார்களா என்று கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் சிலர் இன்றைய ஆட்டம் பிக்சிங் செய்யப்பட்டு விட்டது சிஎஸ்கே ரன்னர் அப்பாக தான் இன்று வருவார்கள் என்பதை பிசிசிஐ சொல்லிவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இது போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் இருக்கும் திரைகளை டெஸ்ட் செய்வதற்காக இவ்வாறு போடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் குஜராத் அணியை வைத்தும் இவ்வாறு ரன்னர் அப் என்ற புகைப்படம் வெளியாகி இருக்கலாம் என்றும் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அப்படியாக இருந்தால் ஏன் சிஎஸ்கே தோற்பது போல் டெஸ்ட் செய்ய வேண்டும். அப்போது என்றால் முடிவு ஏற்கனவே பிக்சிங் செய்யப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் மத்தியில் வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications