Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL தொடரில் ஷர்துல் தாக்கூரின் சோக சாதனை.. தோனி கிட்ட இருந்த வீரருக்கா இந்த நிலைமை.. புள்ளிவிவரம்

மொஹாலி : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சிஎஸ்கே வீரரும் தற்போதைய கொல்கத்தா அணி வீரருமான சர்துல் தாக்கூர் ஒரு சோகமான சாதனையை படைத்திருக்கிறார். பத்து கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்த சர்துல் தாக்கூரை கொல்கத்தா அணி வாங்கியது.

இதனால் புதிய அணியில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய சர்துல் தாக்கூர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். நான்கு ஓவர் வீசிய அவர் 43 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு விக்கெட் கூட விழவில்லை.

IPL 2023 - Shardul thakur worst bowling record

நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் இன்று சர்துல் தாக்கூர் ஓவரில் அடிக்கப்பட்டது. இதன்மூலம் சர்துல் தாக்கூர் சோகமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி கடந்த ஆறு ஆண்டுகளில் அதிக முறை ஐபிஎல் போட்டிகளில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர் என்ற சோக சாதனையை சர்துல் தாக்கூர் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு 17முறையும் முகமது சமியும், பிரசித் கிருஷ்ணா பதினாறு முறையும், 15 முறை டிரெண்ட் பவுல்டும் சிராஜ் 13 முறை 40 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். சிஎஸ்கே அணியில் சர்துல் தாக்கூர் இருந்தவரை ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்தாலும் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்.

இதனால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக சர்துல் தாக்கூர் விளங்கினார். இதன் மூலம் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது .ஆனால் சிஎஸ்கேவை விட்டு எப்போது விலகினாரோ அதிலிருந்து அவருடைய செயல்பாடு சரிய தொடங்கிவிட்டது. இதனால் சர்துல் தாக்கூர் தன்னுடைய பழைய பார்மை மீண்டும் மீட்டு ஆல்ரவுண்டராக ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Story first published: Saturday, April 1, 2023, 18:31 [IST]
Other articles published on Apr 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+