Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 - காவ்யா மாறனின் மாஸ்டர் ஸ்டோர்க்.. கதிகலங்கிய மற்ற அணிகள்.. மினி ஏலத்தில் பலே திட்டம்

ஐதராபாத் : ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகையான 42 கோடியே 25 லட்சம் ரூபாய் உடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

ஐதராபாத் அணி, கடந்த முறை வார்னர், ரஷித்தை விடுவித்து தவறான முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால், ஐதராபாத் அணி, அடுத்த 10 ஆண்டுகள் மனதை வைத்து காய்களை நகர்த்தியது.

இந்த நிலையில், நம் வாழ்க்கையில் செய்த தவறை திருத்தி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பை தான் காவ்யா மாறன் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

2 பெரிய வீரர்கள்

2 பெரிய வீரர்கள்

ஐதராபாத் அணி கடந்த மெகா ஏலத்தில் வில்லியம்சனை 14 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்து கொண்டது. ஆனால் வில்லியம்சன் டி20 போட்டியில் காலாவதியான வீரர் போல் மாறிவிட்டார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் டி20 கிரிக்கெட்டுக்கு சிறிதும் ஒட்டு வரவில்லை. இதனால், பல விமர்சனத்துக்கு வில்லியம்சன் ஆளானார். இதே போன்று நிக்கோலஸ் பூரானை 10 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஐதராபாத் அணி எடுத்தது.

அதிக தொகை

அதிக தொகை

ஆனால் பூரானும், அந்த தொகைக்கு ஏற்ற வீரர் இல்லை என்று அவருடைய ஆட்டத்தை பார்த்தாலே ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். இதனால் இந்த 2 வீரர்களுக்கு கூடுதல் பணத்தை ஐதராபாத் செலவிட்டது. தற்போது, இவ்விருவரையும் விடுவித்ததன் மூலம் 24 கோடி ரூபாய் கிடைத்தது.இதே போன்று மேலும் சிலரை அந்த அணி விடுவித்துள்ளதால் தற்போது, அந்த அணியிடம் 42 கோடியே 25 லட்சம் ரூபாய் உள்ளது.

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்

இந்த பணத்தை வைத்து ஐதராபாத் அணி 2 பெரிய வீரர்களை தலா 20 கோடி ரூபாய் கொடுத்து கூட எடுக்க முடியும். தற்போது அந்த அணியில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஏய்டன் மார்க்ரம், கிளன் பிலிப்ஸ்,அப்துல் சமத், வாசிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன்,மார்கோ யான்சென், ஃபருகி ஆகியோர் உள்ளனர். இதனால், தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கேமிரான் கிரின் போன்ற வீரரை வாங்கினால், அந்த அணியின் பல மடங்கு அதிகரித்துவிடும்.

பலே திட்டம்

பலே திட்டம்

இந்த பிளானை தான் தற்போது காவ்யா மாறன் தீட்டியுள்ளார். ஐதராபாத் அணி தற்போதே தங்களது பிளேயிங் லெவனை கட்டமைத்து விட்டது. தற்போது கூடுதல் சில வீரர்களை தேர்வு செய்தால் சரிக்கட்டி விடலாம். ஐதராபாத் அணிக்கு தற்போது நல்ல சுழற்பந்துவீச்சாளரும், ஒரு ஆல்ரவுண்டரும், ஒரு வெளிநாட்டு அதிரடி பேட்ஸ்மேனும் தான் தேவை. தற்போது அதிக பணத்துடன் காவ்யா மாறன் இறங்குவதால் மற்ற அணிகள் பதற்றம் அடைந்துள்ளனர்.

Story first published: Tuesday, November 15, 2022, 21:50 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+