For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”நீ ஏன்டா எங்க வெற்றிக்கு டான்ஸ் ஆடுற” SRH வெற்றியை கொண்டாடும் ஆர்சிபி, மும்பை.. தெறிக்கும் மீம்ஸ்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் எப்போதும் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்வார். அதுபோல் நேற்றைய ஆட்டத்திலும் 38 பந்துகளில் 66 ரன்கள் விளாசி மீண்டும் ஃபார்முக்கு வந்தார். அதனை சூர்யவம்சம் படத்தில் மணிவண்ணன், "கவுரி ஊர்ல இருக்க 2 நாள்.. நம்ம சின்ராச கைலயே பிடிக்க முடியாது" என்று சொல்லுவார். இதனை மாற்றி, "SRH கூட மேட்ச்னா போதும்.. சேட்டன்ன கைலயே பிடிக்க முடியாது" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

IPL 2023: Stunning Memes from Social Media After a last ball thrill win for SRH against Rajasthan

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லர் 95 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் விளாசினர். இருவரின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 214 ரன்களை குவித்தது. ஜில்லா படத்தில் விஜய், மோகன் லால் இணைந்து வில்லனை கிளைமாக்ஸில் அடிக்கும் காட்சியை மாற்றி, விஜயாக சஞ்சு சாம்சனையும், மோகன் லாலாக பட்லரையும், SRH அணியை வில்லனாகவும் மாற்றி உருவாக்கியுள்ள மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning Memes from Social Media After a last ball thrill win for SRH against Rajasthan

நேற்றைய போட்டியில் பட்லர் 95 ரன்களும், சாம்சன் 66 ரன்களும், அபிஷேக் சர்மா 55 ரன்களும், த்ரிப்பாட்டி 47 ரன்களும், சாஹல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தங்களது அணி வெற்றிக்காக போராடினர். ஆனால் கடைசி நேரத்தில் வந்த கிளென் பிலிப்ஸ், 7 பந்துகளில் 25 ரன்கள் விளாசி ஐதராபாத் அணி வெற்றிக்கு காரணமாக அமைந்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இதனை தூள் படத்தில் வரும் பறவை முனியம்மா விவேக்கிடம், "இந்த கருமத்த தான் இராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா" என்று மிரட்டி விடுவார். அதில் வரும் விவேக்காக அபிஷேக் சர்மா, பட்லர் ஆகியோரையும், மயில்சாமியை சாஹலாவும், பறவை முனியம்மாவை கிளென் பிலிப்ஸாகவும் மாற்றி, "இந்த கருமத்த ஜெயிக்க தான் மேட்ச் முழுக்க முக்கிட்டு இருந்தீங்களா" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் மிரட்டல்.

IPL 2023: Stunning Memes from Social Media After a last ball thrill win for SRH against Rajasthan

நேற்றைய ஆட்டத்தில் சந்தீப் சர்மா கடைசி பந்தில் வீசிய நோ-பால் ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டது. ராஜஸ்தான் வீரர்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கொண்டாடிய நிலையில், நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் ஒருமுறை ஆர்சிபி - சென்னை இடையிலான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்காக ஆடிய ஆர்பி சிங் வீசிய பந்தில் ஜடேஜா கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். இதையடுத்து வெற்றிபெற்றுவிட்டோம் என்று கோலி கொண்டாடும் போது நோ-பால் என்று அறிவிக்கப்படும். இதையடுத்து சென்னை அணி வெற்றிபெறும். நேற்றும் அதேபோல் நிகழ்ந்ததை ஆர்சிபி அணியை போல் ராஜஸ்தான் அணி இருந்ததாகவும், சென்னை அணியை போல் ஐதராபாத் அணி இருந்ததாகவும் உருவாக்கப்பட்ட மீம் நாஸ்டால்ஜியா டச்.

IPL 2023: Stunning Memes from Social Media After a last ball thrill win for SRH against Rajasthan

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடனே உள்ளது. இதனால் 10 புள்ளிகளோடு உள்ள மும்பை, பெங்களூர், பஞ்சாப் அணியின் ரசிகர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். அதனை அருள் படத்தில் மனோபாலாவின் காதலிக்கு காது குத்த வரும் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து ஆடுவார். அப்போது மனோபாலா, யாரு நீ என்று கேட்பார். அதற்கு வடிவேலு, யாரா இருந்தா என்ன.. சேர்ந்து ஆடுயா என்று பதில் சொல்லுவார். அதில் மனோபாலாவாக ஐதராபாத் அணியையும், வடிவேலுவாக மும்பை, ஆர்சிபி அணியையும் மாற்றி உருவாக்கப்பட்ட மீம் ஃபன்.

IPL 2023: Stunning Memes from Social Media After a last ball thrill win for SRH against Rajasthan
Story first published: Monday, May 8, 2023, 7:57 [IST]
Other articles published on May 8, 2023
English summary
IPL 2023: Hyderabad won by 4 Wickets against Rajasthan in a last ball thriller. After this Match, Fans celebrated by creating some best memes in social Media.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+