For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”இவன் வரலாறு.. ஒரு யுகம் பாடும்” வேற லெவலில் கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்.. தெறிக்கவிடும் மீம்ஸ்!

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning memes from Social Media after CSK enters into playoffs by beating Delhi by 77 runs

நடப்பு சீசனில் சென்னை அணியின் பிளேயிங் லெவனில் கேப்டன் தோனி மாற்றம் செய்யவே இல்லை. ஒவ்வொரு முறையும் வர்ணனையாளர்களான ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்ளே, டேனி மாரிஸன், போக்பா உள்ளிட்டோர் கேள்வி கேட்கும் போது, அதே அணியுடன் தான் விளையாடுகிறோம் என்று பதிலளித்து வருகிறார். அதனை கிண்டல் செய்யும் வகையில், தீரன் படத்தில், "இன்னும் தோ கிலோமீட்டர்" என்று ஒரு தாத்தா சொல்வதை மாற்றி தோனி சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ரகம்.

IPL 2023: Stunning memes from Social Media after CSK enters into playoffs by beating Delhi by 77 runs

இந்த சீசனில் ஜடேஜா பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வந்தார். ஆனால் நேற்றையப் போட்டியில் 7 பந்துகளில் 20 ரன்களை குவித்தார். ஆனால் பந்துவீச்சில் 50 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனை வேட்டைக்காரன் படத்தில் விஜயை பார்த்து அனுஷ்கா பாட்டி, "வளையல கொடுத்துட்ட.. டபராசெட்ட எடுத்துட்டு போறீயே டா" என்று சொல்லுவார். அதனை மாற்றி சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவை பார்த்து, "பேட்டிங் நல்லா ஆடிட்ட.. ஆனா பவுலிங்ல கோட்ட விட்டியேப்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2023: Stunning memes from Social Media after CSK enters into playoffs by beating Delhi by 77 runs

நேற்றையப் போட்டியில் ஜடேஜா 7 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 20 ரன்களை விளாசினார். இதன் மூலம் ஜடேஜா பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இதையடுத்து விக்ரம் படத்தில் வரும் ரோலெக்ஸாக ஜடேஜா மாற்றி, "ஆரம்பிக்கலாமா" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

IPL 2023: Stunning memes from Social Media after CSK enters into playoffs by beating Delhi by 77 runs

நேற்றைய ஆட்டத்தில் டாஸின் போது டெல்லி கேப்டன் டேவிட் வார்னர், "சிஎஸ்கே கொண்டாட்டத்தை கலைப்பதே நோக்கம்" என்று சொல்லி இருந்தார். ஆனால் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, 223 ரன்களை குவித்தது. அதனை மாரி படத்தில் தனுஷ், "ஏதோ புறா வளர்க்க தெரியாதுனு சொன்னியாமே" என்று மிரட்டுவார். அதனை மாற்றி சிஎஸ்கே அணி வார்னரை, "ஏதோ பார்ட்டி ஸ்பாயில் பண்ணுவேனு சொன்னியாமே.. பண்ணு.. பாப்போம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning memes from Social Media after CSK enters into playoffs by beating Delhi by 77 runs

சென்னை அணி 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. இதனை விக்ரம் படத்தின் கமல்ஹாசனின் இடைவேளை காட்சியில் வரும், "நாயகன் மீண்டும் வரான்.. எட்டுத்திக்கும் பயன் தானே" என்ற பாடலோடு ஒப்பிட்டு ஃபகத் ஃபாசிலாக குஜராத் அணியை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

Story first published: Sunday, May 21, 2023, 7:30 [IST]
Other articles published on May 21, 2023
English summary
DC cs CSK: CSK won by 77 Runs against Delhi Capitals in IPL 2023. Also Chennai enters into playoffs for the 12th Time in IPL history
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+