டெல்லி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதலங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலி, ஐபிஎல் தொடரில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதனை கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாய், "One and Only Piece" என்று ஒரு வசனம் பேசுவார். அதனை அப்படியே விராட் கோலிக்கு மாற்றி உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்,

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் சார்பாக முதல் அரைசதத்தை லோம்ரோர் விளாசினார். அதனை வேலாயுதம் படத்தில் சந்தானம் ஒரு வழியாக பணத்தை திருடி, திருடனாக மாறி வீட்டில் இருந்து வெளிவருவார். அதனை ஊர் மக்கள் அனைவரும் கூடி நின்று கொண்டாடுவார்கள். அப்போது சூரி, "மாப்ள ஒரு வழியா நம்ம ஆளு திருடிட்டாருயா" என்று செல்போனில் தகவல் சொல்லுவார். அதில் சூரியாக ஆர்சிபி அணியையும், சந்தானமாக லோம்ரோரையும் மாற்றி, "மாப்ள, ஒரு வழியா நம்ம டீம்ல மிடில் ஆர்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்கயா" என்று சொல்லும் காட்சி அட்ரா சக்க ரகம்.

நேற்றையப் போட்டியில் திடீரென டெல்லி வீரர் சால்ட் உடன் சிராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வார்னர், டூ பிளஸிஸ் உள்ளிட்ட வீரர்கள் சிராஜை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை வடிவேலு ஆள் வைத்து அடிப்பவரை அடிக்க குருநாதரை அழைத்து வருவார். அப்போது கடைக்காரரிடம் கேட்கும் போது, "இவன் வீணா சண்டைக்கு போய் அடி வாங்காமா போக மாட்டான்.. மரியாதையா கூட்டிட்டு போய்ரு" என்று சொல்லுவார். அதில் வடிவேலுவாக சிராஜையும், குருநாதராக விராட் கோலியையும், கடைக்காரராக டூ பிளஸிஸையும் மாற்றி, "இவன் வீணா சண்டைக்கு போய் ஃபைன் வாங்க போறான்.. மரியாதையா புத்தி சொல்லு"ன் என்று சொல்வது உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

சிராஜ் உடனான மோதலுக்கு பின் டெல்லி வீரர் சால்ட் அதிரடி உச்சத்திற்கு சென்றது. 45 பந்துகலில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உட்பட 87 ரன்கள் குவித்தார். அதனை உனக்கும் எனக்கும் படத்தில் வரும் சந்தானம் பேசும் வசனத்தை மாற்றி, "உப்புக்காக காந்தி போனார் தண்டி.. அவன சீண்டி விட்டு போனா போண்டி" என்று உருவாக்கப்பட்ட மீம் அதிரடி.

நேற்றைய ஆட்டம் முடிவடைந்த பின், கங்குலி - விராட் கோலி இருவரும் கை குலுங்கி சென்றனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், பெங்களூருவில் ஆடிய போட்டியின் போது கங்குலியிடம் கை குலுக்காமல் விராட் கோலி புறக்கணித்தார. ஆனால் நேற்றையப் போட்டியில் இருவரும் பேசி கொண்டனர். அதனை விஸ்வாசம் படத்தில் அஜித் பேசும் வசனத்தோடு ஒப்பிட்டு, "இவ்ளோ தான் சார் எல்லாம்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.