ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த 6 போட்டிகளில் பட்லரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக உள்ளது. இதனை உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் கவுண்டமணி கார்த்திக்கின் தந்தை பட்டாபட்டி ட்ரவுசருடன் மறைந்து அமர்ந்திருப்பதை பார்த்து, "யோவ் மிலிட்டரி.. நீ என்னயா பண்ணிட்டு இருக்க" என்று கேட்பார். அதுபோல் ரசிகர்கள் பட்லரை பார்த்து, "யோவ் பட்லர் நீ என்னையா இப்படி ஆடிட்டு இருக்க" என்று கிண்டல் செய்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

கடந்த 7 போட்டிகளில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 85 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனை திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷ் தனது தம்பியை பார்த்து, "நீ போறப்போக்க பார்த்தா தக்காளி 10ம் கிளாஸ் கூட தாண்ட மாட்ட போலயே" என்று கிண்டல் செய்வார். அதுபோல் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை பார்த்து, "டேய் சஞ்சு சாம்சன், நீ போறதா பார்த்தா இந்தியா ஏ டீம்க்கு கூட செலக்ட் ஆக மாட்ட போல" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

நேற்றைய ஆட்டத்தில் இன்பேக்ட் பிளேயராக வந்த ரியான் பராக் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். நடப்பு சீசனில் ஒரு போட்டியில் கூட ரியான் பராக் சொல்லிக்கொள்ளும்படியாக பேட்டிங் செய்யவில்லை. அதனை கில்லி படத்தின் விஜயின் தந்தை விஜயை பார்த்து, "பார்த்துட்டு தான்டா இருக்கேன்.. நீ எப்போ அந்த 4 பேப்பரையும் படிச்சு கிளியர் பண்ணப் போறனு" என்று சொல்லுவார். அதனை சஞ்சு சாம்சன் ரியான் பராக்கை பார்த்து, "பார்த்துட்டு தான்டா இருக்கேன்.. நீ எப்போ தான் ரன் அடிக்கப் போறனு" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 119 ரன்கள் இலக்கை குஜராத் அணி 13.5 ஓவர்களில் எட்டி அசத்தியது. இதனை தூள் படத்தில் வரும் விவேக் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென வரும் பறவை முனியம்மா, "இந்த கருமத்ததான் ராத்திரி முழுக்க ஒட்டுட்டு இருந்தியா" என்று கேட்டு போவார். அதுபோல், குஜராத் அணி, "இந்த ஸ்கோர அடிக்க தான் ஆல் அவுட் ஆனிங்களா" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

ராஜஸ்தான் அணியின் ஆடம் ஷாம்பா வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா, 3 சிக்சர் உட்பட 23 ரன்களை விளாசுவார். இது குஜராத் அணி விரைந்து வெற்றிபெற காரணமாக அமைந்தது. இதனால் மீண்டும் பழைய குங் ஃபு பாண்டியா வந்துவிட்டதாக ரசிகர்கள் உருவாக்கிய மீம் மெர்சல்.