Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எப்படிலாம் தோற்க கூடாதோ, அப்படியெல்லாம் தோக்குறாங்க" புலம்பும் காவ்யா மாறன்.. தெறிக்கும் மீம்ஸ்!

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning Memes from social Media after KKR beat SRH by 5 runs

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா கேப்டன் ராணா 31 பந்துகளில் 42 ரன்களை விளாசி அசத்தினார். இதுவரை வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஐதராபாத் அணிக்கு எதிராக சொதப்பியுள்ள ராணா, 10 போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை சண்டக்கோழி படத்தில் வரும் வில்லன் காசி யார் என்றே தெரியாமல் அடிக்கும் விஷாலிடம், தம்பி.. இறங்கி ஓடிரு.. காசி வந்தா வெட்டிருவான் என்று பெரியவர் ஒருவர் கூறுவார். அதற்கு விஷால் எது காசியா.. என்று வெளியில் வந்து பொளந்துவிடுவார். அதுபோல் ராணாவிடம், தம்பி.. இன்னிக்கு ஆட்டம் ஐதராபாத் கூட.. என்று கூற, அதற்கு ராணா, என்னாது ஐதராபாத்தா என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning Memes from social Media after KKR beat SRH by 5 runs

ஐதராபாத் அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் கொல்கத்தா அணிக்கு எதிராக அடித்த ஒரேயொரு சதத்தை தவிர்த்து, மீதம் ஆடிய 8 போட்டிகளில் வெறும் 63 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஐதராபாத் அணியின் தோல்விக்கு ஹாரி ப்ரூக் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனை செக்கச் சிவந்த வானம் படத்தில் தனது அண்ணன் கொலைக்கு அருண் விஜயிடம் ஜோதிகா, நல்லா இருப்பியா தம்பி நீ என்று ஆவேசமாக பேசுவார். அதுபோல், ஐதராபாத் அணியை முடித்த ஹாரி ப்ரூக்கிடம் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், நல்லா இருப்பியா தம்பி நீ என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

IPL 2023: Stunning Memes from social Media after KKR beat SRH by 5 runs

ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் கிளாஸன் மட்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தோல்வியை தவிர்க்க போராடும் ஒரே வீரராக கிளாஸன் செயல்படுகிறார். இதனை ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர்-க்கு அறிமுகம் கொடுக்கப்படும் காட்சியில், "அவங்களுக்கு ஒரு காப்பான் இருக்கான் சார்" என்று சொல்லப்படும். அதனை புலியை அடக்கும் ஜூனியர் என்டிஆரை ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட மீம் மிரட்டல்.

IPL 2023: Stunning Memes from social Media after KKR beat SRH by 5 runs

ஐதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிபெற 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கேகேஆர் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அதனை அப்படியே சூரரை போற்று படத்தில் வரும் சூர்யா, "வானம் என்ன உங்கொப்பன் வீட்டு சொத்தா.." என்று வசனம் பேசுவார். அதனை மாற்றி வருண் சக்கரவர்த்தி, "லாஸ்ட் ஓவர் என்ன வேகப்பந்துவீச்சாளர்களோடு சொத்தா.." என்று கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் சரவெடி.

Story first published: Friday, May 5, 2023, 7:56 [IST]
Other articles published on May 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+