Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”இது ஆர்சிபி 2.0 ராஜா” பெங்களூரு அணியை வைத்து லக்னோவை கலாய்க்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ் இதோ!

மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning Memes from Social Media after Lucknow set a targetof 258 for Punjab

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இது அவருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் 4வது அரைசதமாகும். இவரது ஷாட்கள் கிறிஸ் கெய்லை நினைவுபடுத்துவதாக அமைந்தது. இந்த நிலையில் மீசைய முறுக்கு படத்தில் வரும் ஹிப்ஹாப் ஆதி பேசும், "அண்ணா, சுதாகர் அண்ணா தம்பினா" என்ற வசனத்தை மாற்றி, "அண்ணா கெய்ல் அண்ணா தம்பினா" என்று மேயர்ஸ் பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning Memes from Social Media after Lucknow set a targetof 258 for Punjab

நேற்றையப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் பேசும், கமிஷனர் பொண்ணு சாப்பிடாம இருக்குனு வருத்தமா இருக்கா என்று கேள்வி கேட்பார். அதற்கு தீபா, "இல்ல எங்களுக்கு ஜாலியா தான் இருக்கு" என்று பதில் அளிப்பார். அதனை மாற்றி சிவகார்த்திகேயன், கேஎல் ராகுல் அவுட் ஆகிட்டாருனு வருத்தமா இருக்கா? என்று கேட்பதும் போலவும், அதற்கு லக்னோ அணி ரசிகர்கள், "இல்ல எங்களுக்கு ஜாலியா தான் இருக்கும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்ட மீம் அட்ரா சக்க ரகம்.

IPL 2023: Stunning Memes from Social Media after Lucknow set a targetof 258 for Punjab

லக்னோ அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடியதால் 20 ஓவர்களில் 257 ரன்கள் குவிக்க முடிந்தது. இதனை ஜகமே தந்திரம் படத்தில், "உங்கண்ணன கொலை செஞ்ச நானும் பெரிய இவன்தான்டா" என்று தனுஷ் வசனம் பேசுவார். அதனை மாற்றி, லக்னோ அணி வீரர்கள், "நாங்க தான்டா ரியல் கடப்பாரை பேட்டிங் லைன்அப்" என்று உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

IPL 2023: Stunning Memes from Social Media after Lucknow set a targetof 258 for Punjab

கடந்த போட்டியில் 33 பந்துகளில் 30 ரன்களை எடுக்க முடியாமல் லக்னோ அணி தோல்வியடைந்தது. ஆனால் நேற்றையப் போட்டியில் 257 ரன்களை குவித்து ஆச்சரியம் கொடுத்தது. இதற்கு முன் ஆர்சிபி அணியின் செயல்பாடுகளே இப்படி இருக்கும். இதனை பிஸ்தா படத்தில் வரும் வடிவேலு, "அய்யா முதலாளி அய்யா" என்று வசனத்தை மாற்றி, "அய்யா ஆர்சிபி 2.0 அய்யா" என்று உருவாக்கப்பட்ட மீம் கலக்கல்.

IPL 2023: Stunning Memes from Social Media after Lucknow set a targetof 258 for Punjab

அதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 257 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இருப்பினும் ஆர்சிபி அணி குவித்த 263 ரன்கள் சாதனையை எட்ட முறியடிக்க முடியவில்லை. இதனால் குரு படத்தில் வரும் மாதவனிடம் அபிஷேக் பச்சன், "குரு பாய் ஒருத்தர்தான்" என்று வசனம் பேசுவார். அதனை ஆர்சிபி அணி லக்னோ அணியை பார்த்து, "லக்னோ தம்பி.. 263ஆக இருந்தாலும் சரி, 49ஆக இருந்தாலும் சரி.. என்னிக்குமே அது ஆர்சிபின்ற ஒருத்தனோடது மட்டும் தான்" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

Story first published: Saturday, April 29, 2023, 7:48 [IST]
Other articles published on Apr 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+