Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT Vs RR: ”பழைய ராஜஸ்தான்-னு நினைச்சீங்களா” குஜராத் மீது வன்மத்தை இறக்கிய வெறித்தன மீம்ஸ்!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசாத்திய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் ராஜஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 5 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு தோல்வியை மட்டுமே ராஜஸ்தான் அணி பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு மேடையில், "இன்னும் பழைய பழனிசாமினு நினைச்சிட்டு இருக்கீங்களா" என்று பேசி இருப்பார். அதுபோல் சஞ்சு சாம்சன், "இன்னும் பழைய ராஜஸ்தான்-னு நினைச்சுட்டு இருக்கீங்களா" என்று பேசுவதாக உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning memes from social Media after Rajasthan defeat Gujarat by 3 Wickets

குஜராத் அணியின் சாஹா கொடுத்த கேட்ச்சை சஞ்சு சாம்சன், ஹெட்மயர் மற்றும் படிக்கல் மூவரும் ஒன்றாக பிடிக்க முயன்று கடைசியாக அந்த கேட்ச்சை யார் பிடிக்கிறார்கள் பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த போல்ட் பிடிப்பார். ஒரு சிறிய கலவரமே பிட்ச்சில் நடக்கும். அதனை பார்க்கும் போல்ட் தலையில் கை வைத்து மிரள்வது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

குஜராத் அணி நிர்ணயித்த இலக்கை சேஸ் செய்த போது ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்களும், ஹெட்மயர் 26 பந்துகளில் 56 ரன்களும் இணைந்து விளாசினர். இதனை எதிரிகளை பந்தாட பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்தியதேவனும், அருள்மொழி வர்மனும் சேர்ந்து சண்டை செய்வார்கள். அதில் ஜெயம் ரவியாக சாம்சனையும், ஹெட்மயராக கார்த்தியையும் வைத்து உருவாக்கிய மீம் தெறி.

குஜராத் அணியின் பேட்டிங் முடிவில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் அனைவரின் எகானமியும் 8 ரன்களுக்கு குறையாமல் உள்ளது. ஆனால் சந்தீப் சர்மாவின் எகானமி மட்டும் 6.2 உள்ளது. அதுமட்டுமல்லாமல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருப்பார். இதனை வடசென்னை படத்தில் சிறையில் கிஷோரை சம்பவம் செய்துவிட்டு வரும் தனுஷ் அனைவரையும் விட்டு வெளியேறும் போது, "எதுவும் வேணாம்னு சொல்றவன இப்போதான் பார்க்கிறேன்" என்று சமுத்திரகனி பாராட்டுவார். அந்த வசனத்தை அப்படியே மாற்றி, "எந்தவொரு பாராட்டும் கிடைக்கலையேனு ஃபீல் பண்ணாம விளையாடுறவன இங்க தான்டா பாக்குறேன்" என்று உருவாக்கப்பட்ட மீம் சென்டிமென்டல் டச்.

குஜராத் அணியின் இலக்கை சேஸ் செய்த போது 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 53 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும். ஆனால் அடுத்த 10 ஓவர்களில் 126 ரன்கள் சேர்த்து வெற்றியை எட்டும். இதனை அந்நியன் படத்தில் விக்ரமை டார்ச்சர் செய்து விசாரிக்கும் போது பிரகாஷ்ராஜ், "எரியுதா.. எத்தனை பேருக்கு இப்படி எரிஞ்சிருக்கும்" என்று பேசி இருப்பார். அதனை மாற்றி, பிரகாஷ்ராஜாக ஹெட்மயர் பேசுவதாக, "எரியுதா.. எத்தனை மேட்ச் இப்படி சேஸிங்ல பக்கத்துல போய் வின் பண்ணிருப்பீங்க" என்று உருவாக்கப்பட்ட மீம் குஜராத் மீதான வன்மத்தின் உச்சம்.

IPL 2023: Stunning memes from social Media after Rajasthan defeat Gujarat by 3 Wickets
IPL 2023: Stunning memes from social Media after Rajasthan defeat Gujarat by 3 Wickets
IPL 2023: Stunning memes from social Media after Rajasthan defeat Gujarat by 3 Wickets
Story first published: Monday, April 17, 2023, 7:52 [IST]
Other articles published on Apr 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+