Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எனக்கு ராஜாவா நான் வாழுறேன்" கம்பீர் - விராட் கோலி நேரடி மோதல்.. வெறித்தன மீம்ஸ் இதோ!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சிறந்த மீம்ஸை பார்க்கலாம்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் 44 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஆரஞ்ச் கேப்பும் அவரிடம் மீண்டும் சென்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடி 466 ரன்களை டூ பிளஸிஸ் குவித்துள்ளார். இதனை வீரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் பேசும், "என் குடும்பத்த தொடனும்னா என்னதாண்டி தொடனும்.. தொட்றா பார்க்கலாம்" என்று பேசும் காட்சியுடன் ஒப்பிட்டு அஜித் இடத்தில் டூ பிளஸிஸை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

IPL 2023: Stunning memes from Social media after RCB beat LSG by 18 Runs and Virat Kohli - Gambhir Argument

இத்தனை ஆண்டுகளாக எதிர்முனையில் நின்றிருந்த வீரரை ரன் அவுட் செய்ய காரணமாக அமைந்த தினேஷ் கார்த்திக், நேற்றையப் போட்டியில் தானே ரன் அவுட் செய்யப்பட காரணமாக அமைந்தார். இதனை கோவை பிரதர்ஸ் படத்தில் வடிவேலுவை ஒருவர், "என்னையா ஒன்னு தூங்குற.. இல்ல தூர் வாருற.. கிரிக்கெட் மட்டும் விளையாட மாட்டுற" என்று திட்டுவார். அதில் வடிவேலுவாக தினேஷ் கார்த்திக்கை மாற்றி ரசிகர்கள் திட்டுவது போல், "ஒன்னு பார்ட்னர ரன் அவுட் பண்ணி விடுற.. இல்லனா ரன் அவுட் ஆகுற.. ஆனா கீப்பிங்ல மட்டும் ரன் அவுட் பண்ண மாட்டேங்குற" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் ஆர்சிபி ஃபேன்ஸ் குமுறல்.

சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களை பார்த்து Keep Quiet என்று கவுதம் கம்பீர் செய்கை காட்டி இருந்தார். அதற்கு பதிலடியாக க்ருனால் பாண்டியா கேட்ச்சை பிடித்த விராட் கோலி, லக்னோ மைதானத்தில் வைத்து keep Quiet என்று பதிலடி கொடுத்தார். இதனை தெறி படத்தில் சண்டையின் நடுவே விஜய், "என்ன கணக்குல கரெக்ட்டா இருக்குதா" என்று வசனம் பேசுவார். அதனோடு விராட் கோலியின் கொண்டாட்டத்தை ஒப்பிட்டு, "என்ன கொண்டாட்டம்லாம் கரெக்ட்டா இருக்குதுதா" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

IPL 2023: Stunning memes from Social media after RCB beat LSG by 18 Runs and Virat Kohli - Gambhir Argument

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஆக்ரோஷம் 10 மடங்கு அதிகமாக இருந்தது. லக்னோ வீரர்களே ஏன் இப்படி அதிகமாக கொண்டாடுகிறீர்கள் என்று கேட்கும் அளவிற்கு விராட் கோலி தனியாளாக மைதானத்தை ஆக்ரமித்து கொண்டிருந்தார். அதனை துணிவு படத்தில் வரும் அஜித், "என்ன மாதிரி அய்யோக்கிய பய மேல கைய வைக்கலாமா" என்று வசனம் பேசுவார். அதனை மாற்றி, "என்ன மாதிரி ஒரு அக்ரஸிவ் பிளேயர் கிட்ட உங்க ஸ்லெட்ஜிங்க காட்டலாமா" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்த பின் கம்பீர் - விராட் கோலி இடையே மோதல் ஏற்பட்டது. இது ஒரு பக்கம் பரபரப்பாக நடக்க, இன்னொரு பக்கம் ரசிகர்கள் ஆவேஷ் கானை கலாய்த்து வருகின்றனர். கலகலப்பு படத்தில் வரும் மனோபாலா கதாபாத்திரம், "நல்ல வேள.. இவங் சண்டைல நம்ம பொண்ண தூக்குனத மறந்துட்டாங்க" என்று சொல்லுவார். அதனை மாற்றி ஆவேஷ் கான், "நல்ல வேள.. இவங்க பரம்பர சண்டைல போன மேட்ச்ல நான் ஹெட்ல்மட்ட தூக்கி அடிச்சத மறந்துட்டானுங்க" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி.

IPL 2023: Stunning memes from Social media after RCB beat LSG by 18 Runs and Virat Kohli - Gambhir Argument

அதேபோல் நேற்றையப் போட்டியில் ஆவேஷ் கான் விளையாடவில்லை. இந்த நிலையில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றது. இதனை கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் வயதான அப்பா கதாபாத்திரம், "என் மூத்த பையன் வந்தா எல்லாரும் காலிடா" என்று பேசும் போது அவரின் வேஷ்டியை கழற்றிவிடுவார் சந்தானம். அதனை மாற்றி, லக்னோ அணியினர், "என் பெரிய பையன் ஆவேஷ் கான் வந்தா நீங்க காலிடா" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் பட்டாஸ்.

IPL 2023: Stunning memes from Social media after RCB beat LSG by 18 Runs and Virat Kohli - Gambhir Argument
IPL 2023: Stunning memes from Social media after RCB beat LSG by 18 Runs and Virat Kohli - Gambhir Argument
Story first published: Tuesday, May 2, 2023, 7:49 [IST]
Other articles published on May 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+