"சலாம் ராக்கி பாய்" இவன்தான்யா விண்டேஜ் விராட் கோலி.. ஆர்சிபி ரசிகர்களின் மிரட்டும் மீம்ஸ்!
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் கிளாஸன் 58 பந்துகளில் 104 ரன்களை விளாசினர். அதில் 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இதனை விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதியை பார்த்து, "என்ன சந்தனம், யூ-ட்யூப் தாத்தா மட்டன் பிரியாணி பண்ணிருக்காரு.. நான் ஒரு புடி புடிச்சுட்டேன்.. நீ" என்று சொல்லுவார். அதில் கமல்ஹாசனை கிளாஸனாக மாற்றி, பெங்களூரு வீரர்களை பார்த்து, "நான் ஐதராபாத் பிரியாணி ஒரு புடி புடிச்சுட்டேன்.. நீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

நேற்றையப் போட்டியில் விராட் கோலி 62 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 4 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி மீண்டும் ஐபிஎல் தொடரில் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் விக்ரம் வேதா படத்தில் கமிஷனர் அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நின்று சரணடையும் விஜய் சேதுபதியை பார்த்து, "வேதானா யாருனு கேட்டியே.. பார்த்துக்கோ.. இவன்தான்" என்று ஒரு சொல்லுவார். அதனை மாற்றி, "விண்டேஜ் விராட் கோலினா யாருனு கேட்டியே.. இவன்தான்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

2016ஆம் ஆண்டு மே 18ம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் கைகளில் 10 தையல்களுடன் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். நேற்று (மே 18) நடைபெற்ற போட்டியிலும் விராட் கோலி சதம் விளாசினார். இதனை பாட்ஷா படத்தில் கமிஷனர் அலுவலகம் வரும் மாணிக்கத்தை பார்த்து மிரளும் கமிஷனர், அவர் நடந்து வருவதை பாட்ஷா வருவதாக யோசிப்பார். அந்த காட்சியை 2016 விராட் கோலி சதத்துடனும், நேற்றைய போட்டியில் அடித்த சதத்தையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

ஆர்சிபி அணியின் விராட் கோலிக்கும் லக்னோ அணியின் நவீன் உல் ஹக்கிற்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. விராட் கோலியின் விக்கெட்டை மாம்பழம் சாப்பிட்டு நவீன் உல் ஹக் கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் விராட் கோலி சதம் விளாசி உள்ளார். இதனை கேஜிஎஃப் படத்தில் வரும் ராக்கி பாயாக விராட் கோலியை மாற்றி, "டேய் எவன்டா அது ஸ்வீட் மேங்கோஸ் கேட்டவன்" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மெர்சல்.

நேற்றையப் போட்டியில் ஆர்சிபி அணி ஆடிய ஆட்டம் 2016 ஆர்சிபி அணியை நினைவுபடுத்தியது. இதனால் ஆர்சிபி அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வார்கள் என்று பார்க்கப்படுகிறது. இதனை மெட்ராஸ் படத்தில் மகன் கார்த்திக்கு பெண் தேடும் தந்தை, "எனக்கு என்னமோ இந்த இடம் அமைஞ்சிரும்னு தோனுது" என்று சொல்லுவார். அதனை மாற்றி ஆர்சிபி ரசிகர்கள், "எனக்கு என்னமோ இந்த வாட்டி டிராபி வந்துரும்னு தோனுது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி மொமண்ட்.


Click it and Unblock the Notifications