Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”எம்ஜிஆரும் நான்தான்.. சிவாஜியும் நான்தான்” ஷிகர் தவானை வெளுக்கும் ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்!

தரம்சாலா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning Memes from Social Media, after RR won by 4 Wickets against Punjab

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் சாம் கரண் 31 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். ரூ.18.5 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கரண், சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். அதேபோல் கடைசி போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அதனை கிண்டல் செய்யும் வகையில் கில்லி படத்தில் தந்தையிடம் போட்டுக்கொடுக்கும் தங்கையாக பிரீத்தி ஜிந்தாவையும், விஜயாக சாம் கரணையும் மாற்றி, "அடுத்த ஏலத்துல ரூ.20 கோடி சுருட்ட பிளான் பண்ணிட்டான்பா" என்று உருவாக்கப்பட்ட மீம் ஜாலி ரகம்.

IPL 2023: Stunning Memes from Social Media, after RR won by 4 Wickets against Punjab

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் ஷாரூக் கான் 4 போட்டியில் சிறப்பாக ஃபினிஷ் செய்து கொடுத்துள்ளார். குறிப்பாக நேற்றைய போட்டியில் 23 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். இதனை டாக்டர் படத்தில் வரும் வினய், சிவகார்த்திகேயனை பார்த்து, "யாருடா நீ" என்று கேட்கும் கேள்விக்கு, "டாக்டர்" என்று பதிலளிப்பார். அதுபோல் மற்ற அணிகள் ஷாரூக் கானை பார்த்து கேட்பதாகவும், அதற்கு அவர், "ஃபினிஷர்" என்று பதிலளிப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning Memes from Social Media, after RR won by 4 Wickets against Punjab

கடந்த சீசனில் 4 சதங்களை விளாசி சாதனை படைத்த பட்லர், நடப்பு ஐபிஎல் சீசனில் 5 முறை டக் அவுட்டாகி சாதனை படைத்துள்ளார். அதனை சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் சொல்லும், "எம்ஜிஆரும் நான்தான்.. சிவாஜியும் நான்தான்" என்று சொல்லுவார். ரஜினியின் வசனத்தோடு சேர்த்து பட்லரின் இரு சாதனையையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2023: Stunning Memes from Social Media, after RR won by 4 Wickets against Punjab

நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு சீசனில் 600 ரன்கள் விளாசிய இந்திய அணிக்காக ஆடாத வீரர்களில் முதல் நபர் என்ற சாதனையை படைத்தார். இதனை அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன் மேன், இளம் ஸ்பைடர் மேனை பார்த்து, "Alright Kid.. You're avenger now" என்பார். அதனை அப்படியே மாற்றி விராட் கோலி ஜெய்ஸ்வாலை பார்த்து சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

IPL 2023: Stunning Memes from Social Media, after RR won by 4 Wickets against Punjab

டெல்லி அணிக்கு எதிரான போட்டியை போலவே நேற்றையப் போட்டியிலும் கேப்டன் ஷிகர் தவான் கடைசி ஓவரை ஸ்பின்னர்கள் கைகளில் கொடுத்தார். அதேபோல் பஞ்சாப் அணியும் மீண்டும் தோல்வியடைந்தது. இதனை வின்னர் படத்தில், "ஆள் எப்படி இருந்தான்?" என்ற கேள்விக்கு ரொம்ப "கருப்பா இருந்தான்" என்று ஒரு பெண் பதில் சொல்லுவார். உடனடியாக அப்போ, "கைப்புள்ள" என்று ரியாஸ் கான் கண்டுபிடிப்பார். அதனை மாற்றி, "லாஸ்ட் ஓவர் ஸ்பின்னருக்கு கொடுத்திருக்கான்" என்று சொன்னவுடன், "ஷிகர் தவான்" என்று கண்டுபிடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட ஃபன்.

Story first published: Saturday, May 20, 2023, 8:05 [IST]
Other articles published on May 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+